பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

17

என்று சொல்லி மற்றவர்க்கெல்லாம் பிராமணர்கள்தாம் தெய்வங்கள். அவர்களை நீங்கள் வணங்குங்கள்’ என்று சொன்னால் அந்தத் தெய்வங்கள் ஒழிக்கப்பட வேண்டியவையா இல்லையா?

நீங்கள் (கடவுளைப் பற்றிய கருத்து பற்றி) சரியாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா அல்லது தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்பது பற்றி எங்களுக்குத் தேவையில்லை.

திரு.அரு.கோபாலனுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறதா, அது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எனக்கு இருக்கிறதாக அவரும் கவலைப்படத் தேவையில்லை; திரு.இராமதாசு அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எங்களுக்குத் தேவையில்லை. திரு.அரசமாணிக்கனார்க்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பது பற்றி எங்களுக்கு அக்கறையில்லை

இனம் மீட்கப்பட வேண்டும் என்பதே
எங்கள் கொள்கை:

இந்த இனம் முன்னேற்றப்படவேண்டும். இந்த இனத்தின் அடிமைத் தன்மை ஒழிக்கப்பட வேண்டும்; நீக்கப்படவேண்டும்; அறியாமை ஒழிக்கப்பட வேண்டும்; மூடநம்பிக்கை தகர்க்கப்படவேண்டும்; மத இழிவுகள் அழிக்கப்படவேண்டும்; சாதிப் பூசல்கள் ஒழிக்கப்பட வேண்டும் - அடியோடு தொலைக்கப்பட வேண்டும்: இவைதாம் - இந்த நெருக்கடியான . இக்கட்டுகளிலிருந்து இந்த இனத்தை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முயற்சிகளும், பேச்சுகளும், எழுத்துகளும், செயல்களும், இதுவே ஒரு புதுமையான உலகத்துக்கு