பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

21

களும், கரிகாற் பெருவளத்தான் கதைகளும் தொலைக் காட்சியிலே வருவதில்லை. இராமாயண மகாபாரதக் காட்சிகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. அக்கதைகளைப் படமாக எடுத்தால்தான் அவர்களுக்கு ஆக்கம் பெற முடியும்

இந்தியாவில் உள்ள அத்தனை அறவியல்
கூறுகளுக்கும் தமிழ்தான் மூலம்:

எனவே எந்த நிலையிலும் நாம் எந்தத் துறையிலும் சிறந்து விளங்கினாலும், அந்தத் துறையிலும் ஆரியம் தான் மூலம்; பார்ப்பனீயம் தான் மூலம்; அதிலிருந்துதான் தமிழ் வந்தது என்று (நேரெதிராகச்) சொல்லிவிடுவார்கள், பார்ப்பனர்கள் தமிழ்மொழியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களா, உடனே நம்மவர்களிலே ஒரு தமிழ் ஆராய்ச்சியாளரைக் கொண்டு வந்து மேடை மீது நிறுத்தி விடுவார்கள். இசைக்கலை, நாட்டியக்கலை இதுபோன்ற கலைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களா-கருத்து தெரிவிக்கிறீர்களா. பார்ப்பனீயந்தான் அதிலும் மூலம் என்று கூறிவிடுவார்கள். இந்தியாவிலே இருக்கின்ற அனைத்து அறிவு நிலைகள், கலைநிலைகள், பண்பியல் கூறுகள், மொழியியல் கூறுகள் எதுவானானும் சரி-அதை நீங்கள் சரியாக மனத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும்- அவை முழுவதும் தமிழினத்தைச் சார்ந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது. அவை இசையானாலும் சரி, நாட்டியமானாலும் சரி, இலக்கியமானாலும் சரி, அல்லது மொழியியலிலே நாம் எத்தனை வகையான பிரிவுகளைக் காட்டி-இலக்கியங்கள், பண்பாட்டியல்கள், அல்லது சிறந்த தன்மையுடைய இலக்கணக் கூறுகள் என்று நான் மிகையாகச் சொன்னாலும் சரி - அனைத்தும் தமிழியல் கூறுகளைச் சார்ந்தவையே. இனி,