பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஓ! ஓ! தமிழர்களே!

அவர்களே கூறிக் கொண்டிருக்கின்ற வேதங்களிலே ஏதாவது சிறப்பான கூறுகள், பகுதிகள் இருக்கின்றதாக அவர்களே கூறினாலும் சரி, காட்டினாலும் சரி அந்தப் பகுதிகள் தமிழினத்தைச் சார்ந்தவை; தமிழ் முனிவர்களால் எழுதப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. இது வெறும் ஆசைக்காகச் சொல்லப் பெற்ற அடிப்படையற்ற சொற்கள் அல்ல. அல்லது எதிரியை மடக்க வேண்டும் என்பதற்கான உத்தியுடன் சொல்வதும் அல்ல. உண்மை. ஆகவே நாம் ஏமாறி விடக்கூடாது. இந்த உணர்வுகளைத் தாம் விழித்த விழிப்பாக (நாங்கள் உ.த.மு.க. வழி) செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம், மக்களிடத்திலே!

நம் முயற்சிகள் அனைத்தும் தமிழினத்தைப்
பற்றியவைதாம்!

எனவே விடிவு கட்டாயம் இந்த இனத்திற்கு உண்டு என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவே, நாம் எந்நிலையிலும் சோர்வடைந்து விடக்கூடாது. அதனால்தான் அரசமாணிக்கனார் ஆனாலும் சரி. வடிவேலனார் ஆனாலும் சரி, யாராக இருந்தாலும், நாங்களே வேறு வேறு இயக்கங்களிலே இயங்கினாலும், அது தமிழ்நிலமாக இருந்தாலும், தென்மொழி யாக இருந்தாலும், அல்லது எழுகதிராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அவையெல்லாமே உண்மையான தமிழின முன்னேற்றத்திற்கான தீவிர முயற்சிகள் என்பதை நீங்கள் உணரவேண்டும். இந்த முயற்சிகள் இந்த நூற்றாண்டில் நாம் செய்யவில்லையானால், இன்றும் பத்து இருபது ஆண்டுகளுக்குள் - இங்கேயே இத்தமிழினத்தை மீட்கும் முயற்சியிலே வெற்றி பெற


காண்க : பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும்’

-- -மறைமலையடிகள். (பக். 56)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/32&oldid=1163306" இலிருந்து மீள்விக்கப்பட்டது