பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

23


வில்லையானால் - கூடிய விரைவிலேயே, நாம் அழிக்கப்பட்டு விடுவோம்; படிப்படியாக இந்த அறிவுக்கூறுகள் அழிக்கப்பட்டு விடும் அல்லது ஆரிய நலன்களாக முழுமையாக ஆக்கப்பட்டுவிடும்.

இன்றைக்கு ஏறத்தாழ 75 விழுக்காடு தமிழ் அறிவு நிலைகளை, மொழி நிலைகளை, பண்பாட்டு நிலைகளை, கலை நிலைகளை, இலக்கியத் தன்மைகளை வரலாற்றுத் தன்மைகளை இந்தியாவின் கொள்கைகளாக ஆரியர்கள் என்ன சொல்கிறார்களோ, அனைத்திலும் 75 விழுக்காடு அவர்களுடைய நிலையாகக் காட்டுவதும், ஒரு சிறு அளவு கூறுகளையே தமிழகத்தின் திராவிட மக்களின் தன்மைகளாகக் காட்டுவதும் உங்களுக்குத் தெரிந்ததே! ஆனால் நூற்றுக்கு நூறு இந்தியாவிலே எந்தத்தன்மை பிறந்திருந்தாலும் சரி, மொழியியலா அதற்குத் தனி வரலாறு உண்டு; தன்மை உண்டு; கால எல்லை உண்டு; அது கிரேக்க இலத்தீனையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது-தமிழ் மூலமே என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. கலை-பண்பாட்டு இயலா? பாரதக் கலை, பாரதப் பண்பாடு என்று எதையெதை சொல்லுகிறாமோ அஃது எதுவாக இருந்தாலும் சரி.நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. இதை. நாங்கள் எந்த வரலாற்று ஆசிரியர் முன்னிலையிலும் எடுத்துக்காட்ட அணியமாக இருக்கிறோம், எதுவாக இருந்தாலும் அது தமிழியலைச் சார்ந்தவை. தமிழினத்துக்கு உரியவை. அதேபோல் அறக்கூறுகளாக அவன் சொல்லும் "தர்ம"க் கூறில் அவன் சொல்லும் தர்மம் வேறு நம்முடைய அறம் வேறு!

அவன் தர்மமும், நம் அறமும்:

மக்களிடையே நான்கு வர்ணங்களாகப் பிரித்து, அங்கே ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் ஒவ்வொரு