பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஒ! ஓ! தமிழர்களே!

கடமையாகக் காட்டுவதைத்தான் அவன் தர்மம் என்று சொல்லுகிறான். ஜாதிகள் என்பவற்றைக்கூட பிறப்பின் அடிப்படையிலேயே சொல்லுகிறான். 'ஜாதி' என்கிற சொல் வட சொல். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், தமிழ்ச் சொல் என்று சாதி என்பது தமிழ்ச் சொல். அதற்குக் கூட்டம் என்று பெயர்; குழு என்று பெயர்; ஒரு மக்கள் தொகுதி என்று பெயர். ஜாதி என்று சொன்னால் பிறவியிலேயே வேறுபாடு உள்ள மக்கள் தொகுதி என்று பெயர். ஜாதி 'ஜனி' என்ற வேரடியாகப் பிறந்த சமசுக்கிருதச் சொல். நம்முடைய 'சாதி' என்ற தமிழ்ச் சொல் 'தொழில் பிரிவு', மக்கள் பிரிவுகளை அந்தந்த நிலவேறுபாடாக - தொழில் வேறுபாடாக - நான்கு நிலங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைச் சுட்டிச் சொல்வது - என்பதை உணர வேண்டும், அதற்கு ஒரே ஒரு சான்று - எடுத்துக்காட்டு தெளிவாக விளக்கம் தருகிற ஒர் உண்மை - என்னவென்று சொன்னால், இந்தச் சாதிப்பிரிவு என்று என்னென்ன இருக்கின்றனவோ, அந்தப் பெயர்ப் பட்டியல் அனைத்தையும் எடுத்துப் படித்துப் பார்த்தால், அனைத்துப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். நாடார், பிள்ளை, கவண்டர், முதலியார், படையாட்சி, இதுபோன்ற எந்தச்சொல் ஆனாலும் தென்பகுதியில் வழங்குகின்ற சாதிச் சொற்கள், வட பகுதியிலே மாறியிருக்கின்ற சொற்கள் ஆக இருக்கும்

இங்கே 'நாய்க்கர்’ என்று இருப்பது கேரளாவில் 'நாயர்' என்றிருக்கும். ஆந்திராவுக்குப் போனால் 'நாயுடு' என்றிருக்கும். இஃது எல்லாமே தலைமையைக் குறிக்கின்ற சொல்லாக இருக்கும். வடபகுதியில் சென்றால் 'நாய்க்' என்றிருக்கும். எல்லாமே தலைமைச் சொல்! எல்லாமே தமிழ்ச்சொல்! ஏன்? இது தொழில் பிரிவாகப் பிரிந்த இனம், மிக நீண்ட காலமாகவே