பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஓ ! ஓ ! தமிழா்களே !

"வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார்:
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்.
நம்செயல், ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்;
நாம் உணர்ந்தோம் இந்நாள்; அவர் அஞ்சி

விழித்தார்"

என்று பாவேந்தர் அவர்கள் சொல்லுகிறார்கள் என்று சொன்னால், நாம் உணர்ந்து விட்டோம் என்று இன்று அஞ்சி விழித்துக் கொண்டிருக்கிறார்கள்

கலைஞர் ஆட்சிக் கவிழ்ப்பு :

ஆகவே, இனிமேல் இவர்களைத் தாக்குவது, எப்படி வீழ்த்துவது; எந்த வகையிலே பின்னடையச் செய்வது என்று எண்ணித்தான் 'இரவு வரைக்கும் நாங்கள் நீக்க மாட்டோம்' என்று சொல்கிறார் தலைமை அமைச்சா் 'கவிழ்க்க மாட்டோம் என்றும் ஒழிக்க மாட்டோம்' என்றும் சொல்கிறார். ஆம் என்று இவரும் (கலைஞரும்) நம்பி, தோள் மேல் கைபோட்டுக்கொண்டு செல்கிறார்: இரண்டு முறை பறக்கிறார் சந்திரசேகரிடம் பேசுவதற்கு. வி.பி.சிங்கிடத்தில் தொடர்பு கொண்ட அந்த நிலையினாலே, வெறுப்பினாலே சந்திரசேகரைத் தமக்குத் தோழமையாக்கிக் கொள்ள ஓர் அரசியல் தந்திரம் செய்து என்ன பயன்? ஒன்றுமில்லையே. இரவு தூங்கப் போகிறார் விடியலில் கவிழ்கிறது என்று சொன்னால் - இப்போது அரசியலில் அது எவ்வளவு வலிவு பெற்ற இனமாக இருக்கின்றது. இத்தனைக்கும் சந்திரசேகர் அப்படி என்ன ஆரியரா? இல்லையே! ஏன் அப்படி வீழ்த்தினார்? வீழ்த்துவதை அவர் விரும்பினாரா? - இல்லையே! ஒருவர் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், ஒருவர் ஆரியராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தச் செயல்கள் இந்தியாவில் நடக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/36&oldid=1163309" இலிருந்து மீள்விக்கப்பட்டது