பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

27

என்று சொன்னால், அவர்களின் வலிவு எப்படிப்பட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்: ["கலைஞர் ஆட்சிக் கவிழ்ப்பு, தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கை ஓங்குவதற்குக் கலைஞர் இடங்கொடுத்ததால், தாம் சொந்தமாக எடுத்த முடிவு' என்று சொல்லிக் கொண்டுவந்த சந்திரசேகர், இராசீவ் மறைவுக்குப் பின்னர்.இந்திராப் பேராயம் நடுவணரசைக் கைப்பற்றிய பின்னர் - கலைஞர் ஆட்சியைக் கலைக்கச் சொல்லி இராசீவும், செயலலிதாவுந்தாம், வலியுறுத்தினர்’ என்று பேசினார். (தினமணி 27-6-91 சென்னைப் பதிப்பு) என்பது இங்கே கவனிக்கத்தக்கது.] அந்த செயலலிதா என்ற அரசியலில் இழிவான நிலையுள்ள நாடக நடிகையை, எவ்வளவு தான் நாம் இழிவாகச் சொன்னாலும், இந்த இருபதாம் நூற்றாண்டிலே, அறிவியல் வளர்ச்சி பெற்ற நிலையிலே. அறிவியல் கருவிகள் எல்லாம் உலகத்தை மருட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே - அமெரிக்கா, உருசியா போன்ற நாடுகளெல்லாம்கூட, உலகப் போர் வந்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருக்கிற இந்த நிலையிலே, இங்கு எப்படிப்பட்ட அரசியல் நடக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். ஒன்றுமே திறனற்ற, வெறும் பேச்சுத்திறன் மட்டுமே கொண்ட ஒரு பெண்மணி, ஒரு நடிகை, அரசியலிலே உச்ச நிலையிலே. போய், உச்சிக் கிளையை ஆட்ட முடிகிறது என்று சொன்னால், இந்தியாவில் அரசியலா நடக்கிறது? அரசியல் ஒழுங்கா இருக்கிறது? என்ன அரசியல் அது? மக்களியல் தழுவிய அரசியல் அல்லவா சிறந்தது. அதற்கல்லவா நாம் துணைபோக வேண்டும். மக்களியல் தழுவாத மாறான செயலை அரசியலிலே தனிப்பட்ட ஒருவர் செய்கிறார் என்று சொன்னால், அது இந்தியாவில் நடைபெறுகிறது என்று சொன்னால் இந்த இந்திய அரசியலை நாம் நம்ப முடியுமா? நம்பலாமா?