பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

29

முடியும், தமிழினத்தை நாம் உயர்த்தி விடமுடியும் என்று கனவு கண்ட அண்ணா போன்ற பெருமக்கள் எவ்வளவு இதுபோன்ற பிழைகளைத் தொடர்ந்து செய்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த வரலாற்றை, நிலைகளை எடுத்துப் பாருங்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னாலே நமக்கு என்ன சிறப்புக் கிடைத்தது என்பதைப் புள்ளி விளக்கங்கள் வைத்து மதிப்பிட்டு பாருங்கள். குறைத்து மதிப்பிட்டுப் பார்க்க வேண்டாம். தமிழ்நாடு என்று பெயர் வந்ததா? உண்மையா? அஃது உண்மைதான், வந்தது. அது ஒரு பெருமைதான்; வைத்துக் கொள்வோம். அதனோடு சேர்ந்த வேறு சில செயல்களைச் செய்ய முடிந்ததா? அதாவது தெருப் பெயர்கள், சாதிப் பெயர்கள் மாற்றங்கள் இருந்தனவா? இருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நிலைமைகள் அப்படியேதாம் இருக்கின்றன

இனம் நலமாக - வலுவாக இல்லையானால்
என்ன சிறப்பிருந்தும் பயனில்லை

வள்ளுவர் கோட்டத்தினாலே நமக்கு நன்மை இருக்கிறதா? பெருமை இருக்கிறது. எல்லாவற்றிலும்தான் பெருமை திருக்குறளில் இல்லாத பெருமையா திருக்குறள் கோட்டத்தினால் வந்துவிடப் போகிறது? திருவள்ளுவருக்குத் தங்கத்தாலே ஒரு பெரிய சிலையைத் தமிழ்நாட்டிலே அமைத்தாலே கூட, அந்த சிலையெல்லாம் ஒரு நொடிப் பொழுதிலே வீழ்த்தப்பட்டு விடும். இலங்கையிலே வீழ்த்தப்படவில்லையே, ஒளவையார், திருவள்ளுவர் சிலைகள்? இலங்கையிலே தெருக்களிலே செல்வர்கள், வணிகர்கள் ஒன்பான் மணிகளை விற்கும் வணிகர்களெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டார்கள் இதை நினைக்கின்றபோதுதான் திருவள்ளுவரின் "மனநலன் நன்குடையாராயினும் சான்