பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஓ ! ஓ ! தமிழர்களே !

றோர்க்கு இனநலன் ஏமாப்புடைத்து" - என்பதன் வழி . அறிவு நிலையிலே உயர்ந்திருந்தாலும், பண்பு நிலையிலே உயர்ந்திருந்தாலும், கலைநிலையிலே எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தாலும், எவ்வளவு ஆட்சிச் சிறப்புப் பெற்றிருந்தாலும். எவ்வளவு வரலாற்று நிலையிலே பெருமை பெற்றிருந்தாலும், நாகரிகத்திலே, பண்பாட்டிலே உயர்வு பெற்றிருந்தாலும், மனநலம் நன்குடையராயினும், சான்றோர்க்கு இனநலன் ஏமாப்புடைத்து (காவல் உடையது) என்று கூறுகிறார். திருவள்ளுவர்

ஓர் இனம் நலமாக இருந்தாலும், அந்த இனத்தின் கூறுகள், அறிவியல் கூறுகள் முதல் - அரசியல் கூறுகள் வரை எந்தநிலையாக இருந்தாலும் அது காக்கப்பெறும். இல்லையானால் அது அழிக்கப்பெறும். அழிக்கப்பட்டு விட்டன; அழிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கண்ணுக்குக் கண்ணாகப் பார்க்கிறோம். இருப்பினும் நமக்கு அந்த உணர்வு வரவில்லையே ஏன்? நம்முடைய நிலைகள், எந்த நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் இப்படித்தான்!

இன்று தமிழினத்திலேயே ஒருவன்தான் வீரன்
அன்று நாம் வீரர்கள், இன்று நாம் கோழைகள் :

'அஞ்சி அஞ்சிச் சாவார்; அஞ்சாத பேரில்லை, நம் முடைய இனத்தினிலே - இதை அவர்கள்தாம் பார்த்துச் சொன்னது. நமக்கு உணர்த்தினது. அவர்கள் நம்மை இகழ்ந்து பேசினது இந்தத் தன்மைதான். நாம் எதற்கும் அஞ்சுகிறவர்கள், இன்றைக்குத் தமிழ் இனத்தினுடைய வீரம், வீரத்தினுடைய விளைவு - உண்மையாகவே தமிழினம் ஒருகாலத்தில் வீரமுற்றிருந்த இனம் என வரலாற்றிலே படித்திருக்கிறோம்.