பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஓ ! ஓ ! தமிழா்களே !

தான் சொன்னேன், கூடிய விரைவில் கலைஞர் ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள் என்று சொன்னேன். யாரும் நான் சொன்னதை நம்பவில்லை. ஏன் அடிக்கடி தலைமை அமைச்சர், அல்லது அவரைச் சார்ந்தவர்கள் தமிழகத்திற்கு வரும்பொழுதெல்லாம் 'நாங்கள் தி.மு.க. ஆட்சியை இறக்கிவிடமாட்டோம், குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டுவரமாட்டோம்' என்று உறுதி கூறிக் கொண்டிகுந்தார்கள். நூறு முறை வலியுறுத்திச் சொல்கிறோம் என்றெல்லாம் உறுதி கூறிச் சென்றார்கள். ஆனால், நாங்களெல்லாம் சொன்னோம். இந்த ஆட்சி நீக்கப்பட்டுவிடும் என்று. கலைஞர் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கலைஞரைத் தவிர வேறு எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடைய நிலையும் அப்படித் தான். யாருக்காகவும் அவர்கள் விட்டுக்கொடுப்பதாய் இல்லை.

கலைஞருக்கு முன்பே கொடுத்த வேண்டுகை:

தமிழ் வளரக்கூடாது, தமிழினம் முன்னேறிவிடக் கூடாது. தமிழகத்தின் அரசியலிலே தமிழகத்தின் கை ஓங்கி இருக்கக்கூடாது இதுதான் அவர்களுடைய அடிப்படையான நோக்கங்கள், பார்வைகள், இந்த நிலைக்கு மாறாக எந்த நிலை ஏற்பட்டாலும் அதை விட்டுவைக்க மாட்டார்கள். அவர்கள் இறக்கி விடுவதற்கு முன்னால், கலைஞர் அவர்களே! 'நீங்களே சட்டமன்றத்தைக் கூட்டித் தமிழீழத்திற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, நாங்கள் எங்கள் தமிழினத்தைப் பொறுத்த அளவிலே எங்களுக்கு உரிமை பெற்ற நாடு ஒன்று வேண்டும்; அது தமிழீழத்திலே நடைபெறுகிறது. பிரபாகரனுடைய தலைமையிலே தமிழீழம் மலரப்போகிறது. ஆகவே அந்தத் தமிழீழத்தை ஆதரிக்கிறோம், வரவேற்