பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ஓ ! ஓ ! தமிழா்களே !

வேண்டும். அப்போதுதான் கட்டாயம் நாம் எதிர்காலத்தில் விளைவைச் செய்துகொள்ள முடியும், அதற்கு நம்முடைய பெருமைக்குரிய அறிஞர் இராமதாசு (த.இ. வி.க.) போன்றவர்கள். அருமைமிகு அரு.கோபாலன் போன்றவர்கள், இன்னும் பாட்டாளி மக்கள் கட்சி இராமதாசு போன்றவர்கள். தமிழ்த் தேசிய இயக்க நெடுமாறன் போன்றவர்கள், இன்னும் சிறு சிறு உதிரி இயக்கங்களாக இருக்கின்றவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர வேண்டும். எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்ந்து ஒரே இயக்கமாக வடிவம்கொண்டு, வலிமை சேர்த்து அஃது ஒரு மூன்றாவது இயக்க உணர்வை உண்டாக்க வேண்டும். இளைஞர்களுடைய கருத்தையும் சேர்த்துக்கொண்டு, ஒரு பெரிய வலுவான ஆற்றலாக மலரவேண்டும்; அப்படி மலர்ந்தால்தான் எதிர்காலத்திலே அரசியலை நம்பியோ, அல்லது வேறுவகையான வடநாட்டாரின் ஆட்சியை நம்பியோ, ஏமாளியாகாமல், நம் தமிழ் இன முன்னேற்றத்தைக் கட்டிக்காத்து அழிவின்றிப் பாதுகாக்கமுடியும்; இன விடுதலையையும் பெற முடியும். நாட்டு விடுதலையையும் பெற முடியும். இல்லையானால் எந்தவகையான, எந்த முயற்சியும் நமக்குப் பயன் அளிக்காது

இளைஞர்க்கு நாம் சொல்லிக்கொள்வது:

இந்தியாவை ஆட்டிப்படைக்கிற, இந்தியாவின் தேசிய இனங்களை ஆட்டிப்படைக்கிற, அடிமைப்படுத்தி, வைக்கின்ற அந்த நிலையில் இருந்து, நாம் மீள்வது என்பது மிகவும் அரிது. அரிதினும் அரிது, அது வரலாற்றிலே நடைபெற வேண்டுமானால் வலிமையான வழிமுறைகளை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். வேறு யாரிடத்திலிருந்து அதைப் பெறுவது? வல்லரசுகளிடமிருந்து அதைப் பெறமுடியுமா? இல்லை:நம்மிடையே தாழ்ந்து கிடக்கின்ற வீழ்ந்துகிடக்கின்ற தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட,