பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

37

எந்தத் துறையிலே எடுத்துக் கொண்டாலும் சரி. வரலாற்றுத் துறையா?, ஆராய்ச்சித் துறையா?. கல்லூரியா?, நடுவணரசைச் சார்ந்த ஆராய்ச்சிக் கூடங்களா? - அனைத்திலும் அவர்கள் அறிவுக்காக ஏராளமான பொருள்களை வாரி இறைக்கின்றார்கள்

நம்மவர்களில் சிறந்தவர்களையெல்லாம்
அவர்களுக்குத் துணையாக்கிக் கொள்ளுகிறார்கள்

நம்மவர்கள். நம் இனத் தமிழர்கள் பேரறிஞர்களாக இருக்கின்றவர்கள் எல்லாம், அவர்கள் காலிலே விழுந்து, அவர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். ஆகவே, எந்த முயற்சிக்கும் நம்மை மேலே ஏறிவிடாதபடி கண்காணிப்பாக இருந்து கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள் பார்ப்பனர்கள். நம்மவர்களை அவர்களுக்கானவர்களாக மாற்றிக் கொள்ளுகிறார்கள்: எம்.எசு.சுப்புலட்சுமி வரலாறு ஒன்று போதுமே. இசைத்துறையிலே அந்த அம்மையார் எவ்வளவு பெரும் புகழ் பெற்றிருக்கின்றார்: அவரைப் போல இசைத் துறையிலே, இந்தியாவிலே எந்த இசைக்கலைஞர் ஒருவரும் இவ்வளவு பெருமை பெற்றதில்லை; அவர் யார்? தமிழர் - தமிழினத்தைச் சார்ந்தவர். அவரை அவர்களுக்கு எப்படி அடிமைப்படுத்தி விட்டனர்! பார்ப்பனரைத் திருமணம் செய்வித்து அந்த அம்மையாரைப் பார்ப்பனத்தி போலவே ஆக்கி விட்டார்கள். சேலை கட்டுவது, பேசுவது, நடப்பது, போவது, வருவது எல்லாமே பார்ப்பன அமைப்புதான். தஞ்சாவூர் தமிழச்சி அல்லவா!

அதேபோல, அகிலன் யார் தமிழன்: புதினத்துறையிலே மேம்பட்ட எழுத்தாற்றல் பெற்றவர். என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/47&oldid=1163323" இலிருந்து மீள்விக்கப்பட்டது