38
ஓ ! ஓ ! தமிழர்களே !
நடந்தது? அவரிடமும் பார்ப்பனத்தியை அனுப்பி, இரண்டாம் திருமணம் செய்யச் சொல்லி, அவரைப் பார்ப்பானாக மாற்றிக் கடைசியில் அவருக்கு இந்திய அளவிலே பரிசு கொடுக்கச் செய்து. அவரையும் ஒரு பார்ப்பானாகவே ஆக்கிக்கொண்டார்கள். எந்தக் கலைத்துறையிலே எந்தச் சிறந்த மேதைகள் வந்தாலும் சரி, அறிவுத்துறையிலே ஆராய்ச்சியாளர் வந்து சிறந்தாலும் சரி;அறிவியல் துறையிலே எவ்வளவு பெரிய அறிஞர்களாக சிறந்து விளங்கினாலும் சரி; எந்த வகையிலே அரசியல் அறிஞர்களாக இருந்தாலும் சரி; அல்லது தலைவர்களாக இருந்தாலும் சரி. உடனே அவர்களைத் தங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இது உண்மையா, பொய்யா?
அதேபோல, சமயத்துறையிலே கூட நம்மவர்களிலே யாராவது தப்பித்தவறி அவர்களின் புராண, இதிகாசக் கதைகளையும், அவர்கள் வெளியிலே சொல்லிப் பரப்புகிறவர்களாக இருந்தால், அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் தங்களுக்குச் சார்பாக ஆக்கிக்கொண்டு, நம்முடைய தமிழர்களை மூடர்களாகவும், மூடநம்பிக்கை உடையவர்களாகவும், மதத்திலே, சேற்றிலே புதைத்துவிடுகிறார்கள். அந்த நிலைகளை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்
நமக்குரியனவற்றையும்
அவர்களுடையனவாக்கிக் கொள்கிறார்கள்:
அதேபோல, பண்பாட்டியல் துறையிலே என்று எத்தனைத்துறை? இந்தியா முழுவதும் ஒருமைப்பாடு, ஒற்றுமை என்கிற பெயராலே, இந்தியப் பண்பாட்டியல் துறைகளுக்கு எவ்வளவு பொருள்களை வாரி இறைக்கிறார்கள்! இத்தனையும் பாரதப் பண்பாடு, பாரதக்