பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

இஃது ஒரு சொற்பொழிவு நூல்!

இதுவரை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், நான் ஆற்றிய பன்னுாற்றுக் கணக்கான சொற்பொழிவுகளுள், முதன் முதல் நூல் வடிவில் வெளி வருவது இநநூலே! வெளிவர வேண்டுவன இன்னும் நிறைய உள

இது, கடந்த 17-2-91-இல், ஈரோட்டில், 'உலகத் தமிழின முன்னேற்றக் கழகச் சார்பில், 'மாவட்ட இரண்டாவது மாநாடும்', 'பாவேந்தர் நூற்றாண்டு நிறைவு விழா'வும் கலந்து நடந்த ஒருநாள் நிகழ்ச்சியின் பொழுது ஆற்றிய ஒன்றரை மணி நேரச் சிறப்புச் சொற்பொழிவு ஆகும்

அம் மாநாட்டில் கலந்துகொண்ட பலரும், இச் சொற்பொழிவு மிகவும் பயனுடைய ஒன்றாக இருந்ததென்றும். இதை நூல் வடிவில் கொணர்ந்தால், அம்மாநாட்டில் கலந்துகொள்ள இயலாதவர்களும், பிறரும், படித்து மிகுபயன் பெறுவார்களென்றும். என்னிடம் கருத்துத் தெரிவித்தமையால், இதனை நூல் வடிவில் கொணகும் தேவை உண்டாயிற்று

இந்நூலை அச்சேற்றி வெளியிடும் பொறுப்பை ஏற்றவர். அம் மாநாட்டைப் பற்பல இடையூறுகளுக்கும் இடர்ப்பாடுகளுக்கும், அஞ்சத் தகுந்த ஒரு சூழ்