பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

41

தமிழக அரசு வாழப்பாடி மீது வழக்குப் போடுகிறது. உடனே நடுவண் அரசு அவருக்குக் கை கொடுக்கிறது. 'நீ கவலைப்படாதே அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று. நீங்கள் மட்டும் எங்களுக்குச் சார்பாக இருந்தால் போதும். சரி, நீங்கள்தாம் எல்லாம், இப்படித் தனித்தனியாக, அச்சுறுத்தியும், அதிகாரத்தைக் காட்டியும், - பலவகையில் கவர்ச்சியை ஊட்டியும், பல நிலைகளிலும் பணத்தைக் கொடுத்தும் பல கோடி ரூபாய் செலவிடுகிறார்கள்

நான் என் மக்களுக்காக எழுதிக் கொண்டுதான்
இருப்பேன்; பேசிக்கொண்டுதான் இருப்பேன்;

எனவே, இந்த நிலையிலே நாங்கள் சொல்வதெல்லாம் யாருடைய காதிலும் விழாது. இவர்கள் ஏதோ கத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று எள்ளி நகையாடுகிறார்கள். நன்றாக "நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்; உள்துறை அமைச்சகம் எனக்கு ஓர் அறிக்கை கொடுத்துள்ளது. நீங்கள் இனிமேல் பேசக் கூடாது; எதையும் எழுதக்கூடாது; அப்படி எழுதினால் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம்"' என வெளிப்படையாகவே எனக்கு ஓர் அறிக்கை, கொடுத்தார்கள். நான் உடனே அவர்களுக்குத் தெளிவான விடை எழுதினேன். நீங்கள் என்னை எழுதக்கூடாது, பேசக்கூடாது என்று சொல்வதற்கு, சட்டத்திலே உரிமை இல்லை என்று அவர்களுக்குத் தெரிவித்தேன். நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி. அதிகாரத்தில் இருந்தாலும் சரி, இந்திய ஆட்சியின் சட்டத்திலே, என் மொழிக்காகவும் என் தமிழினத்துக்காகவும் என்னுடைய நாட்டு முன்னேற்றத்திற்காகவும், தமிழக முன்னேற்றத்திற்காகவும் நான் எழுதுவேன். பேசுவேன். எந்த நிலையிலும் நீங்கள்