உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ஓ ! ஓ ! தமிழர்களே !

என்னை அப்படிச் செய்யக்கூடாது எனக்கூற உங்களுக்கு உரிமை இல்லை. நான் அப்படி ஏதாவது இந்தியச் சட்டத்திற்கு மாறாகப் பேசுவதாகக் கருதினால், என்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் என்னை அச்சுறுத்திப் பணியவைக்க முடியாது’ என்று நடுவணரசுக்கு ஒரு பெரிய அறிக்கை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைத் 'தமிழ்நில'த்திலும் வெளியிட்டேன், அவர்கள் எனக்குக் கொடுத்த அறிக்கை, பின் நான் அவர்களுக்குக் கொடுத்த மறுப்பு அறிக்கை அத்தனையையும் அவர்களால் என்னை ஒன்றும் செய்ய இயலவில்லை என்ன செய்து விடுவார்கள்?

உரிமைக்குப் போராடுவது எல்லா நாடுகளிலும்
நடப்பதுதான்; எனவே ஏன் அச்சம்?

கலைஞர். தமிழகம் உடனே தனியாகப் பிரிய வேண்டும்’ என்று தப்பித் தவறி ஒருசொல் கூறியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்; என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது. சதாம் உசேன் எவ்வளவு பெரிய ஆள்? எவ்வளவு சிறிய நிலையிலே இருந்துகொண்டு. ஒரு சிறிய பகுதியை ஆண்டுகொண்டு. எவ்வளவு பெரிய வல்லரசான அமெரிக்காவை மட்டுமன்று: அதோடு சேர்ந்த 28 நாடுகளின் போர்ப்படையை எதிர்த்து நிற்கவில்லையா? சூளுரைக்க வில்லையா? எதிர்த்துப் பேசவில்லையா? - அவரை என்ன, உடனே, கொன்றுவிட்டார்களா? இதனால் அந்த நாட்டு மக்கள் அழிகிறார்கள் என்று சொன்னால், எந்த நாட்டு மக்கள் போராட்டத்தாலே அழிக்கப்படாதவர்கள்? எல்லா நாட்டு மக்களும் அப்படித்தான் இருப்பார்கள். ஒரு புரட்சி என்று வந்தாலும், போர் என்று வந்தாலும் அந்த நிலைதான் ஏற்படும். அதற்காகப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/52&oldid=1228525" இலிருந்து மீள்விக்கப்பட்டது