பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

43

பொதுமக்கள் அழியக் கூடாது என்று கூறமுடியாது: அது நடக்கக் கூடியதும் அன்று. ஆனால் அது அவனுடைய துணிவு, அந்த நாட்டு மக்களையும், நாட்டையும் ஆணவப் பிடியிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற, மதத்தையும் காப்பதற்காக அவன் துணிந்து நிற்கின்ற தன்மை! அனைத்தையும் விட நமக்கு மானம் பெரிதல்லவா? இவ்வளவு பெரிய இனம் பின்புலமாக நிற்கின்ற பொழுது, துணிந்து நின்று, உங்கள் உரிமைகளைக் கூறுவதால், உங்களை என்ன செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஆட்சியில் அமர்ந்திருந்தும் இந்தத் துணிவு உங்களுக்கு வரவில்லையே. ஆட்சியிலே இருக்கின்றீர்கள் என்பதால் நீங்கள் சற்று எளிதாகக் கூறலாம்; ஆனால் துணிவாகச் சொல்ல முடிய வில்லையே, எவ்வளவு பெரிய இழுக்கு! நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே நம்முடைய நிலையிலிருந்து ஒரு சில மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஐயா அவர்கள் சொன்னார்கள், அரங்க நிகழ்ச்சிகளிலே நம்பிக்கை இல்லை என்று : உண்மைதான். இதைப்போல, இதுபோன்ற ஆயிரம் நிகழ்ச்சிகளிலே இது குறித்து உலகம் முழுவதும் பேசிவிட்டேன்

வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நிறையக்
கூட்டங்கள் பேசியுள்ளேன்! ஆனால் பயனில்லையே!

மன்னிக்க வேண்டும் நான் பெருமைக்காகச் சொல்ல வில்லை தமிழைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும், தமிழ்நாட்டு விடுதலையைப் பற்றியும், தமிழகத்திலே பிறந்த எவரும் அத்தனைக் கூட்டங்கள் பேசியிருக்க முடியாது. அத்தனைக் கூட்டங்கள் உலகம் முழுவதும், ஐரோப்பாவிலே ஏறத்தாழ 58 கூட்டங்கள்,