பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ஓ ! ஓ ! தமிழர்களே !

றுத்திப் பார்க்கலாம். காலம் இப்படியே இராது. இன்னும் இதற்கு மேலும் இதை விட வலிவான இளைஞர்கள், அடுத்தத் தலைமுறையினர்கள் தோன்றுவார்கள், தோன்றிக் கொண்டே இருப்பார்கள் . ஒரு பிரபாகரன் அங்கே தமிழீழத்தில் மட்டும் தோன்றியிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். பிரபாகரன் என்கின்ற ஒரு வீரன் தமிழினத்தில் ஒருவன் மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். எத்தனையோ பிரபாகரன்கள் இங்கே இருக்கிறார்கள்; தோன்றிக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் விரைவிலே எழுந்து நிற்கப் போகிறார்கள், பிரபாகரன் எழுந்த பின்தான் அவனுடைய வீரம் உலகத்திற்கே வெளிப்பட்டது. அதுபோன்ற நிலைகள் தமிழகத்திலும் வரப்போகின்றன. எனவே அதற்குப் பின்னாலே கூப்பிட்டு, நீங்கள் அமைதியாகப் பேசி ஓர் அரசியல் நிலையிலே, ஓர் இன நிலையிலே, ஒரு சமநிலை காணுகின்ற முயற்சியிலே ஈடுபட்டாக வேண்டியிருக்கும். ஏனென்றால் காலம் அறிவியல் காலமாக மாறிவருகிறது. நீங்கள் என்ன அறிவியல் கருவிகளை எடுக்கிறீர்களோ, அதே கருவிகளை மக்கள் அனைவரும் எடுப்பதற்கு வாய்ப்புகள் மிகுகின்றன. எனவே அவ்வாறான தன்மைகள், அப்படிப்பட்ட நிலைகள் வளர்ந்து வருகின்றன. எனவே யாரையும் அச்சுறுத்தி, காவல் துறையை விட்டு அல்லது படைத்துறையை அனுப்பி, ஒரு பெரிய எதிர்ப்பினுடைய உணர்வை, உரிமை எழுச்சியைத் தடுத்துவிட முடியாது - என்பதை அரசு உறுதியாக நினைவுகூர வேண்டும்

உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின்
நோக்கமும், முயற்சியும்!

எனவே, உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்று சொன்னால், உலகத்தில் உள்ள ஒரு பெயருக்