உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

51

பண்பாடு இருக்கும்; கலைகள் இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி, 'மனநலம் நன்குடையராயினும் சான்றோர்க்கு இனநலம் போய் விட்டால், எல்லாம் போய்விடும்; எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்; சிதறடிக்கப்பட்டுவிடும்; கடைசியில் ஒன்றுமே இருக்காது

எதிரிகள் நாம் முன்னேறி விடக்கூடாது என்பதில் எத்துணை விழிப்பாக இருக்கிறார்கள் :

ஒரு கண்ணகி கோயிலை நம்மால் மீட்க முடியவில்லை. ஒரு சிலப்பதிகாரத்தைக் கதை என்ற அளவிலே கூட காட்ட முடியவில்லை. ஆனால் வெறும் கற்பனைக் கதையான இராமாயண, மகாபாரதத்தை இந்தியா முழுவதும் பரப்புகிறார்கள் என்று சொன்னால் - ஏன்? அந்த இனத்தினுடைய பெருமையைக் கூறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அதற்கு எதிரெதிராக இருந்து ஏமாறிக் கொண்டிருக்கிற மக்கள் ஏமாறிக் கொண்டிருப்பார்கள். அதற்குச் சார்பாக நின்று வலுப்பெறுகின்ற அந்த இனம் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கும். இந்த இரண்டு விளைவுகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடிமைப்பட்ட இனம் அடிமைப்பட்டே இருக்க வேண்டும். அதை அடிமைப்படுத்தி இருக்கின்ற இனம் விழிப்பாக இருக்கவேண்டும்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்குத்தான் இராமாயண, மகாபாரதக் கதைகள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சி, வானொலிகளில், எழுத்துகளில் எந்த எந்த நிலைகளில் திறமையோடு சிறுவர்களுக்கு வண்ணப்படங்களில் சிறிய சிறிய கதைகளாக-பெரியவர்களுக்குப் பெரிய விளக்கங்கனோடு உளவியல் தன்மை இவ்வளவு இருக்கிறது. அவ்வளவு இருக்கிறது என்று அடடா - யாருக்கும் விளங்காதபடி கூறி - ஆக்கி வைத்திருக்கிறார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/61&oldid=1163404" இலிருந்து மீள்விக்கப்பட்டது