பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஓ ! ஓ ! தமிழர்களே !

ஆரியர்களும் முதலில் மெய்யறிவியலான ஐம்பூதங்களைத் தாம் வணங்கினார்கள். அவர்கள் ஆசியாவிவிருந்து கொண்டிருக்கும்போது, அந்த வணக்கம் கிடையாது. ஒன்றும் கிடையாது. இதெல்லாம் வரலாறு சொல்கின்றது. நாம் ஒன்றும் இட்டுக் கட்டிச் சொல்வதில்லை: அவர்களுடைய எந்த நிலையுமே இங்கு வந்த பின்னே ஏற்பட்ட நிலைமைதான்! அவர்களுடையன் மொழிநிலை கூட இங்குவந்த பின்னால்தான் செப்பமாக அமைத்துக் கொள்ளப்பட்டது. அதுதான் சமசுக்கிருதம். அது கி.மு.2500 ஆண்டுபோல் ஏற்பட்ட ஒரு மொழி. தமிழ் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்றுநாம் சொல்லவில்லை, மொழி ஆராய்ச்சி அறிஞர்கள். உலகியல் அறிஞர்கள், உயிரியல் அறிஞர்கள் எல்லா நிலைகளையும் உணர்ந்து சொல்லுகின்ற மாந்தவியல் அறிஞர்கள் எல்லோரும் - கொள்கையைக் காட்டி வரையறுத்துக் கூறியுள்ளார்கள். எல்லா மொழியியல் அறிஞர்களும் மொழியியல் வரலாறுகளைச் சொல்லி, ஒவ்வொரு மொழியிலும், இன்ன இன்ன அளவிலே படி நிலை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைக் காட்டியுள்ளார்கள். எனவே நாம் தமிழிலே பிறந்து விட்டோம் - தாய்மொழி தமிழ் என்பதற்காக, தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அவ்வாறானால் அதில் பொருள் இருக்காது

"தமிழ்வாழ்க என்பதால் தமிழ் வளர்ந்து விடுமா"?

"தமிழ் வாழ்க" என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் வளர்ந்து விடுமா? மின்சாரம் கூட நின்று போகின்றது. இங்குள்ள அத்தனை பேரும் சேர்ந்து "மின்சாரம் வாழ்க மின்சாரம் வாழ்க" - என்று கத்திக் கொண்டிருந்தால் மின்சாரம் வந்து விடுமா? அல்லது