பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ஓ ! ஓ ! தமிழர்களே !

தென்ஆப்பிரிக்காவிலே கருப்பர் இன மக்களை விரட்டினார்கள் அங்கே ஒரு மண்டேலா இருந்து பாடுபட்டார். அல்லது வேறொரு வகையில், அவர்களுக்கு நமக்கு இருக்கிறது போலவே ஏராளமான தெய்வ நம்பிக்கையும், மத நம்பிக்கையும், கடவுள் கோயில்களும் இன்றைக்கும் இருந்து கொண்டுதான் உள்ளன. ஏன்? அரேபியர்களுக்கு இல்லையா? இசுரேலியர்களுக்கு இல்லையா? அந்தக் கிறித்துவம் தோன்றிய இடமே அங்கு தானே? ஏன் இந்த விளைவுகள் தெய்வ இயலால் வரவில்லை? நான் எதற்காகச் சொல்லுகிறேன்? நம்முடைய நம்பிக்கையை நான் பழுது சொல்லவில்லை. அதைப்பற்றி இழித்துச் பேசவும் விரும்பவில்லை. அது ஓர் அறிவு நிலை அது அறிவு நிலையாக இருக்க வேண்டுமே தவிர அந்த நிலை செயல்நிலையாக வாழ்வியலாக, ஆகிவிடமுடியாது

நம் பூசல்களாலும் வேறுபாடுகளாலுமே இனம் தாழ்வடைந்து விட்டது:

வாழ்வியல் என்பது நாம் கண்கூடாகப் பார்க்கின்ற செயல்களை உள்ளடக்கியது. எனவே, மதத்திற்காகவும், சாதிக்காகவும் நாம் பிளவு ஏற்படுத்திக் கொண்டு, நமது முயற்சிகளை முடப்படுத்திக் கொண்டு, உரிமை இழப்புகளுக்கு ஆளாகி விடக்கூடாது. அந்த உரிமை இழப்புகளால்தான் இத்தனையாயிரம் ஆண்டுகளாக நம் உடைமைகளை இழந்து, அழிந்து கொண்டிருக்கிறோம். உலகத்திலே இன்றைக்கு மாந்த இனங்கள், மக்கள் இனங்கள். தேசிய இனங்கள் என்று சொன்னால் இருக்கின்ற அத்தனை தேசிய இனங்களிலும், மக்கள் இனங்களிலும் மிகப்பழமையான இனம், மிகப்பெருமை வாய்ந்த இனம். மிகப்பெரிய நாகரிகத்தைப் பெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/64&oldid=1166114" இலிருந்து மீள்விக்கப்பட்டது