பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

57

இன மக்களை அடிமைப்படுத்தித்தான் வைத்திருப்போம். ஓர் இன மக்கள் தாழ்த்தப்பட்டுதான் இருக்க வேண்டும்.ஏன் என்றால் அடிமையாக உழைப்பதற்கு வேறு இடத்திலிருந்து மக்களைக் கூட்டிக் கொண்டு வர முடியாது. தமிழின மக்களைத்தாம் - சூத்திர இன மக்களைத்தாம் . அதற்கு ஒதுக்கி இருக்கிறோம் - என்று சொன்னால் அந்த இந்து மதம் எங்களுக்கு வேண்டாம். அந்தக் கடவுள்களே எங்களுக்கு வேண்டாம் என்றுதான் நாங்கள் சொல்லுவோம்.

...அதேபோல் அரசியலிலும் வேற்றுமைகள்
என்றால், உன்னுடைய ஆட்சியும் எங்கட்கு
வேண்டாம்

எல்லாருக்கும் பொதுவான இறைவனை உனக்கு ஒருவனுக்கு உன்னுடைய சாதிக்கு என்று சொல்லிக் கொள்ளுவது போலவே, அரசியலிலும் நீ ஆளுமைச் சாதியாக இருக்கிறாய்; மேம்பட்ட சாதியாய் இருக்கிறாய். உயர் சாதியாய் இருக்கிறாய். உச்ச நிலையிலே உச்சாணிக் கொம்பிலே ஏறிக்கொண்டு மற்ற எல்லா இனமக்களையும் காலிலே போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறாய். அரசியலிலே தாழ்ச்சி. இனவியலிலே தாழ்ச்சி, கல்வியிலே எங்கள் தாய் மொழியிலே கற்க முடியவில்லை. வழிபாட்டுக்கு நாங்கள் விரும்புகிற மொழியிலே வழிபாடு செய்ய முடியவில்லை. எங்களுடைய தாய்மொழியைப் பேச முடியவில்லை. அதை அரசு மொழியாக ஆக்கமுடியவில்லை : இதைப் பண்பாட்டு மொழியாகச் செய்ய முடியவில்லை. எல்லாவற்றிலும் நாங்கள் அடிமைப்பட்டு இழந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், 'உன்னுடைய ஆட்சியும் எங்களுக்குத் தேவை இல்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/67&oldid=1163463" இலிருந்து மீள்விக்கப்பட்டது