பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

V

நாள் அரசியல், பொருளியல், குமுகவியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒப்பவைத்துக் காட்டி உரைக்கும் சிறந்ததொரு நிறைகருத்து வெளிப்பாட்டு நூலாகும். இக்கருத்தின் மேல், அவர்கள் தங்களுடைய மேம்பாட்டிற்கென்று, செய்து கொள்ள வேண்டிய முயற்சிகளும், முனைப்புகளும் செயற்பாடுகளும், அவரவர்களுக்குள்ள கொள்கை உரனுக்கும், உறுதிப்பாடுகட்கும், அவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இழப்புகட்கும் ஈகங்கட்கும் ஏற்ப அமைத்துக் கொள்வனவாகும்

இவையன்றி. இவ்வின முன்னேற்றம் எளிதில் வாயாதென்க

இச் சொற்பொழிவில் கூறப் பெறும்- சுட்டிக் காட்டப் பெறும் - கருத்துகளும், காரணங்களும், பொதுவாகவும், சில விடத்துச் சிறப்பாகவும், உள்ளனவேனும், அவை அழுத்தமானவையாகவும், உண்மையானவையாகவும், எவருக்கும் அஞ்சாதனவாகவும். எவர் பொருட்டும் கரிசனம், கண்ணோட்டம் காட்டாதவையாகவும் உள்ளதை, இதை அழுந்திப் படிப்பவர் நன்கு உணர்ந்து கொள்வர்

கருத்துகளை உணர்ந்தவர்கள் எடுத்துச் சொல்வதும், அவற்றைப் பின்பற்றுவதும், அவ்வக் காலச் சூழ்நிலைக்கும். அவரவர் தனித் திறனுக்கும். தனித் தன்மைக்கும் ஏற்றனவாகவே அமைய முடியும்

எனவே, அவற்றைக் கருத்தூன்றிக் கவனிக்கும் முதுவர்களும் இளைஞர்களும் அறிஞர்களும் அறியாதவர்களும், வறிஞர்களும், வாழ்வில் பின் தங்கியிருப்பவர்களும், தாங்கள் தங்கள் ஏற்பு, இயல் வலிமைகளுக்கு ஒத்த வகையில், எவ்வாறேனும் ஒரு