பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஓ ! ஓ ! தமிழர்களே !

ஆட்சி என்பது ஒரு பணி - ஓர் ஆசிரியப் பணி போன்றது. அந்த ஆசிரியப் பணிக்கு வந்த ஆசிரியர் ஒருவர் கல்வியை மாணவர்களுக்குச் சொல்லித் தருவது போல அஃது ஒரு கடமை, அது நிகழ வேண்டும்.

ஆட்சி என்பது யார் வந்தாலும் நடக்க வேண்டிய ஒரு பணி போன்றது : நாம் ஆட்சிக்குப் போவது இனத்தின் நன்மைக்காகவே இருக்க வேண்டும் :

இவர்கள் போனாலும் நிகழும்; வேறுயார் போனாலும் நிகழும்: நம்மவர்கள் போகிறார்கள் என்று சொன்னால், நம்முடைய இனத்தின் தாழ்ச்சியை மீட்பதற்காக - அவர்களுடைய உரிமையைப் பெறுவதற்கான - முயற்சிகளைத் தான் செய்யவேண்டும். அதற்குத்தான் திருவள்ளுவர் சொல்வார். "அப்பா, நீ எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால் செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்ய வேண்டுவனவற்றைச் செய்யாமல் போனால், அது உன்னுடைய அதிகாரத்திலே, அறிவிலே, உழைப்பிலே முயற்சியிலே தடையாகி விடும்.

இதில் செய்ய வேண்டுவனவற்றைச் செய்யாமல் விடுவது ஒன்று: அல்லது செய்ய வேண்டாதவற்றைச் செய்வது மற்ற ஒன்று.

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்"

நம்(ம) இவர்கள் பாவேந்தர் விழாவைக் கொண்டாடிய அழகு :

பாரதிதாசனுடைய நூற்றாண்டு விழா என்று சொன்னால், அதிலே எங்களையெல்லாம் குழு உறுப்பி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/70&oldid=1163467" இலிருந்து மீள்விக்கப்பட்டது