பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

61

னர்களாக்கி, என்னையெல்லாம் கேட்டார்கள், ஒரு பெரிய குழு 28, 30 பேர். இப்போது 45 பேர். நான் ஓர் எட்டே எட்டுக் கருத்துகளை மட்டும் வைத்தேன். மிகவும் சிறந்த கருத்துகள். 'தென்மொழி'யிலேயே அதை வெளியிட்டு இருக்கிறேன். அதைக் கேட்டுவிட்டு, அமைச்சர் அன்பழகன் சொல்லுகிறார்: "இவர்கள் பாரதிதாசனுடைய நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவதற்குக் கருத்தைச் சொல்லுங்கள் என்று சொன்னால், அவருடைய விழாவை நூறாண்டுகள் விழாவாகக் கொண்டாடுவதற்குரிய கருத்துகளைச் சொல்லுகிறார்கள்" என்று சொன்னார்

எங்கே நான் நூறாண்டு கொண்டாடுவதற்காகவாக் கருத்தைச் சொன்னேன்? இல்லை. பாரதிதாசனை நிலைப்படுத்துவதற்காகச் சொன்னேன். பாரதியாருக்கு எத்தனைக் கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாது, சொன்னால் வியப்படைவீர்கள். புள்ளி விளக்கங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. அவருடைய வீட்டை விலைக்கு வாங்கி, நிலத்தை விலைக்கு வாங்கி, ஊரிலே போய் அதற்கென்று ஒரு பெரிய நிலத்தை வாங்கி, எட்டயபுரத்திலே, அவருடைய நினைவு மண்டபம், மணி மண்டபம், இவ்வாறு எவ்வளவு பெரிய உருவாக்கம். ஆனால் பாரதிதாசனுக்கு ஒரு சிறிய உருவாக்கமும் இல்லை. ஆங்காங்கே கூட்டம்; பட்டிமன்றம்: பாட்டரங்கம், பாராட்டு, பரிசுகள், விழா வேடிக்கைகள்: இவ்வளவோடு சரி. இதுதானா பாரதிதாசன் நூற்றாண்டு விழா இதைத்தான் சொன்னேன் நான். மன்னிக்க வேண்டும். நான் குறை சொல்ல வில்லை. நமக்கு இருக்கின்றது முழுப் பட்டினி முழுப் பசி! அதற்குப் போய், நீ துளியளவு கடலைமிட்டாய் கொடுத்துச் சாப்பிடு என்று சொல்லுகிறது போல்