பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

63

கொடுக்கிறோம்' என்று சொல்லுகிறார்கள். நீங்கள் சிற்றூர்களுக்குப் போங்கள். உழவர்களைப் பாருங்கள், உங்களுக்கு என்ன கடன்கள் கிடைக்கின்றன என்று கேட்டுப் பாருங்கள். 10,000 அவன் கடன் கொடுத்தால், அவர்கள் கையில் பெறுவது 5,000. அந்த ஐந்தாயிரத்தை வைப்பக அதிகாரி அலுவலர், அமைச்சர் வரை எல்லாகும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். அதற்காகத் தான் கடன் திட்டமே வைத்திருக்கிறான். எப்படிப் பின்னே வருமானம் வரும்? பெரிய இடத்துத் திருட்டுகள், அரசியல் திருட்டுகள், புரட்டுகள், ஏமாற்றுகள், எத்துகள், தொழிலியல் திருட்டுகள், ஏமாற்றுகள்!

கல்விக் கூடங்களிலே என்ன வாழ்கிறது?

கல்விக்கூடங்களில் எல்லாம் பெரிய பெரிய தொகைகளை வாங்குகிறார்கள். காலையில் பேசிய அந்த அம்மையார் சொன்னார்கள்; மிகச் சிறப்பாகச் சொன்னார்கள், பெண்களுக்கு எங்கே வேலை: கல்லூரிகளில் சேர்த்துக் கொள்கின்றனரா? சிறு மழலைப் பள்ளியிலே சேர்வதற்கு 5,000-10,000- சென்னையிலே தொடக்கப் பள்ளியிலே சேர்வதற்கு 5,000 - 10,000, உயர்நிலைப் பள்ளியிலே சேர்வதற்கு 20,000- 30,000, கல்லூரியிலே சேர்வதற்கு 50,000 ஓரிலக்கம், இரண்டிலக்கம், பணியிலே சேர்வதற்கு 30,000-இலிருந்து 2 இலக்கம் வரைக்கும். பொறியியல் படித்த மாணவன் ஒருவன் முதல் வகுப்பிலே தேறினாலே கூட, அவனுக்குப் பணி கொடுக்க ஓரிலக்கம் கேட்கிறார்கள். யார் நம்மவர்கள்? இது எங்கே? மண்டல் அறிக்கை - என்று சொல்வது உண்மையா? சரிதானா? அல்லது வேறு எங்காவது இருந்து இங்கு வந்தார்களா? நம்முடையவர்கள்தாம். ஒரிலக்கம் 50 ஆயிரம் கேட்கின்றனர். காவல் துறை