66
ஓ ! ஓ ! தமிழர்களே !
இடங்களிலும் நம்முடைய அன்பர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளுக்குப் போகின்ற அரசியல் தலைவர்கள் எல்லாம் பார்த்து வியந்துவிட்டு வருகிறார்கள். எண்ண அளவிலே, கருத்தளவிலே, கொள்கை அளவிலே! இயக்க அளவிலே அன்று. இன்றைக்கு நாங்கள் அதை ஒர் இயக்கமாக ஒரு கட்டளை போட்டு, அங்கே அதை ஏதாவது ஒரு செயலைச் செய்து விடுங்கள் என்று சொன்னால், அதை அங்கே அவர்கள் செய்து முடிக்கிற நிலையிலே எங்கள் இயக்கங்கள் இன்னும் வளரவில்லை. கொள்கை அளவிலே - கருத்து அளவிலே - ஒரு செயலுக்கு முந்தைய முயற்சி நிலையிலே - அது நின்று வளர்ச்சி பெற்று வருகின்றது. இந்த இயக்கம். இந்த நான்கு ஆண்டுகளாக இடைக்கால நிலையிலே பலவகையான அரசியல் தாக்கங்களால் நலிந்து, மெலிந்து வாடி நிற்கின்றதே தவிர, அது மறைந்து போய்விடவில்லை; இறந்து போய்விடவில்லை; அழிந்து போய்விடவில்லை; அதை அழிக்க முடியாது. யாரும் மறைத்துவிட முடியாது என்பதை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்துவதற்காகத்தான், இங்கு, பெரியார் மாவட்ட அளவிலே, இவ்வளவு பெரிய இக்கடடான சூழ்நிலையில், இக்கட்டான இந்நாளில், நம்முடைய மாநாடு, பெரியார் மாவட்டத் தலைவர், நம்முடைய புலவர். ஆற்றல் மிக்க உண்மையான மறவர். தமிழின மறவர் அரசமாணிக்கனார் அவர்களால் நடத்தப் பெறுகிறது. இங்கே வந்திருப்பவர்கள் குறைவானவர்களாக இருக்க லாம். வரமுடியாதவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இது மாநில அளவிலே கூட்டப்பட்ட மாநாடு அன்று. எனவே நாங்கள் அதிகமாக விளம்பரம் செய்ய முடிய வில்லை. அதிகமாக இதற்குச் செலவழிக்கவும் விரும்ப வில்லை. மக்களிடத்திலே ஏதோ ஒரு வகையிலே