உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ஓ ! ஓ ! தமிழர்களே !

இந்தப் பொதுநிலை கழக நூல் உரைக்கும்!
அந்த வரலாறு அடியொடு மாறியே 60
இன்றைய அடிமை இனவர லாறாய்க்
குன்றிக் குலைந்து கொடுமைப் பட்டதே!


உரைக்கக் கேளிதை; உன்னினம் இன்றோ
அரைக்காணி நிலத்தையே அளப்பருஞ் சொத்தாய்க்
கருதிக் கொண்டு கவலாது கிடக்கும்!
பெருநிலம் உனக்குச் சொந்தம் என்பதோ,
மொழிவழி உன்றன் முன்னோர் அதனையே
வழி வழித் தாயமாய் வைத்தனர் என்பதோ,
அடிமையாய் போன பின் அறிந்ததிலை நீயே!

தடிமையாய்ப் போனதுன் தோலும் மானமும்!

70


விடியாத் தமிழனாய் வீழ்ந்து கிடப்பாய்!
படியாய்ப் போனதுன் முதுகு, பாரடா!


ஆரியன் வந்தான்; அரசைக் குலைத்தான்!
ஊரிலே புகுந்துன் உறவைக் கெடுத்தான்!
தமிழனாய் வாழ்ந்தவன் தலைத்தலைப் பிரிந்தே
உமிழத் தக்க ஒரு நூறு குலமாய்ப்
பிரிந்து தன்பழம் பெயரையும் மறந்தாய்!
உரிந்து தள்ளினான், ஊசைப் பார்ப்பான்!
குலத்தைக் காட்டிக் குனி, நீ என்றான்:

நிலத்தைக் காட்டி நிமிர், உழை என்றான்?

80


குனிந்தாய் நிமிர்ந்தாய்: குடுமியன் சொற்குப்
பணிந்தாய்; படுத்தாப் பற்பல கதைகளைச்
சொல்லிக் கிடந்தான்; சொக்கிப் போனாய்!
கல்லி எடுத்தான் மூளையை! கவன்றிலை!


சொல்லில் செயலில் வல்ல நீ, அதன்பின்
பல்லி சொல்லுக்குப் பயன் கேட்டு நின்றாய்
கல்லை நிமிர்த்திக் கடவுள் என்றாய்!
பொல்லாப் பழங்கதை புழக்கத்தில் வரவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/80&oldid=1166125" இலிருந்து மீள்விக்கப்பட்டது