பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ஓ ! ஓ ! தமிழர்களே !

தமிழரின் குருதி யோட்டம்
தனித் தமிழ் ஒட்டம் இல்லை :
தமிழரைத் தமிழர்_நாட்டில்

தமிழனே மதிப்ப தில்லை!

13


அடிமைக்கோ ரடிமை தன்னால்
ஆகிடப் போவ தென்ன?
மிடிமைக்கு மிடிமை யாங்கன்
மேல்துணை வருதல் கூடும்?
விடிவிலாத் தமிழன் சொந்த
வீட்டிலும் வறுமை காய்ந்தால்
மடிதட்டி வரவா செய்வான்,

தம்பியின் மலைப்ப சிக்கே?

14


கொடுமையாம் கொடுமை! என்றன்
குலமே, நீ கேட்டுக் கொள்க !
கடுமையிற் கடுமை என்னல்
உரிமையில் கவலை யற்றல்!
நெடுமையாங் கால மாக
தமிழ்க்குல மரபே, நீதான்
கெடுமையை நலமென் றெண்ணிக்

கீழ்மையை உரிமை என்றாய்!

15


இலங்கையில் தமிழர் கூட்டம்
இழிசெயப் படுவ தற்கும்.
கலங்கிய அதன் கண் ணீரைத்
துடைத்துநீ காவா தற்கும்
விலங்கொன்றுன் காலில் கொண்ட
விளைவதே கரணம் என்பேன்!
துலங்குயர் விடுத லைதான்

இருவர்க்கும் துணையாம் இன்றே!

16


தமிழர்க்கிங் குரிமைச் சாவே
விடுதலை வாழ்வாம் என்க!
கமழ் புகழ் பேரி னந்தன்
காலந்தேர் கால மெல்லாம்
அமிழ்கின்ற அடிமைச் சேற்றில்
அலைவுறல் வாழ்க்கை என்றால்,
உமிழ்கந்த வாழ்க்கை யின்மேல்;

ஒருகோடி தீமை சாகும்!

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/88&oldid=1163653" இலிருந்து மீள்விக்கப்பட்டது