பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ஓ ! ஓ ! தமிழர்களே !

வயலுண்டு; வளமு முண்டு!
வாழ்தமி ழகத்தில்; ஆனால்
செயலுண்டோ, உரிமை யுண்டோ,

உங்களைச் சீந்து தற்கே?

22


குலைகுலை யாகப் பூத்த
குலமே,செந் தமிழ்ப்பூக் காடே!
விலையிலை உன்மொ ழிக்கே:
விளைவுக்கும் வரலா றில்லை!
அலையலை யாகப் போனாய்,
அயல் நிலத் தேடி! அங்கே
இலையிலை யாக வீழ்ந்தாய்!

இருப்பது கிளையொன் றேயாம்?

23


அடிமரம் தமிழ்நி லந்தான்!
ஆனாலும் மரத்தின் வேரில்
குடி கொளும் ஆரி யந்தான்
கொடுநாகம்! அந்நா கத்தின்
முடிமயல் கொள்ளு மாறு
மகுடிவைத் துாதும் ஆட்சி!
விடியுங்கொல், இருளுங் கொல்லோ,

விறல்தமிழ் மரத்தின் வாழ்க்கை?

24


விடுதலை ஒன்றே வாழ்க்கை
விடிவுறச் செய்யும் மாற்றார்
கெடுதலைத் தூள்தூ ளாக்கும்!
கீழ்மையைத் தலைகீ ழாக்கும்!
அடுதலைச் செய்க! உண்மை
ஆர்வத்தால் உணர்வால் பூக்கும்
விடுதலை! அதைநி னைத்தால்

மண்ணன்று; விண்நம் கையில்!

25


-1975

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/90&oldid=1163655" இலிருந்து மீள்விக்கப்பட்டது