பக்கம்:ஓ மனிதா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிளி கேட்கிறது

99

ஆபட்ஸ் பரிக்குப் போய் அழகிப் பேட்டி நீதிபதிகளில் ஒருவனாக நீயும் உட்கார்ந்தால் என்ன அர்த்தம்? வீட்டில் சீதாப்பிராட்டியைப் பற்றியும், கண்ணகியைப் பற்றியும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே போய் ‘காபரே’ பார்த்தால் என்ன பொருள்?

பொருளாவது, அர்த்தமாவது—அனர்த்தம்தான்!

அழகு மயக்கத்தில் கொஞ்சங் கொஞ்சமாக அறிவை இழந்து கொண்டிருக்கும் மனிதனே, உன்னை மயக்கும் அழகு என்னிடமும் பெண்ணிடமும் மட்டுமில்லை. நீ பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் அது இருக்கிறது. அந்த அழகை நீ பார்க்கும் விதத்தில் பார்த்து, வளர்க்கும் விதத்தில் வளர்த்தால் அது உன்னைத் தேவனாகவும் ஆக்கலாம், சைத்தானாகவும் மாற்றலாம்.

இந்த இரண்டில் நீ எதுவாக விரும்புகிறாய்?—இதுவே என் கேள்வி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/100&oldid=1371067" இலிருந்து மீள்விக்கப்பட்டது