பக்கம்:ஓ மனிதா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14. கீரி கேட்கிறது

தெருவில் வித்தை காட்டுவோர் ‘கீரி-பாம்புச் சண்டை’ என்று ஏதோ ஒரு சண்டையைக் காட்டி வயிறு வளர்த்தாலும் வளர்க்கிறார்கள், அதைப் பார்த்துவிட்டு நீங்கள் என்னை வைத்து கயிறு திரிக்கிறீர்கள்!

நம்ப வேண்டியதை நம்பமாட்டீர்கள்; நம்ப வேண்டாததை யெல்லாம் நம்புவீர்கள். இதுதானே உங்கள் இயல்பு?

‘கண் ஒளி மங்கிவிட்டது; எந்தக் கண்ணாடி போட்டாலும் தெரியவில்லை. ஆபரேஷன் செய்தால் தான் பார்வை திரும்பும்’ என்கிறார் டாக்டர். அதில் உங்களுக்கு அவ்வளவு எளிதில் நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது; ‘பார்வை திரும்புமோ, திரும்பாதோ?’ என்று சந்தேகப்படுகிறீர்கள்.

திடீரென்று ஒரு கால் விளங்காமல் போய்விடுகிறது. கம்பை எடுத்து ஊன்றிக்கொண்டு ஒரு காட்டு வைத்தியரிடம் செல்கிறீர்கள். அவர் உங்கள் காலைத் தொட்டுப் பார்த்து, அசைத்துப் பார்த்து, ‘மூன்றே நாள் எண்ணெயில் இதைச் சரிப்படுத்தி விடலாம்’ என்கிறார். அதில் உங்களுக்கு அவ்வளவு எளிதில் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது; ‘மூன்றே நாள் எண்ணெயில் முடவனை எழுந்து கடக்க வைத் து விடுவானாம். இவன் சொல்வதை நம்ப நான் என்ன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/101&oldid=1371074" இலிருந்து மீள்விக்கப்பட்டது