பக்கம்:ஓ மனிதா.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

ஒ, மனிதா!

 அவர்கள் பேசுவதில்லை; சதா மெளனம், மெளனம், மெளனம்.

சீடகோடிகள் என்று சிலர் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்துகொண்டு, அவர்கள் தேவைகளையும் அவர்களே தேடிவரும் பக்தர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்.

வேலையில்லையா?

பிடி விபூதி, வேலை கிடைத்துவிடுகிறது

பிள்ளை இல்லையா?

பிடி விபூதி, பிள்ளை பிறந்து விடுகிறது.

எல்லாம் ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை’ தான் என்றாலும் சாமியார்களின் புகழ் ஊர் முழுக்கப் பரவிக்கொண்டே இருக்கிறது.

பழமாகவும் பாலாகவும் செலுத்தப்பட்டு வந்த காணிக்கைகள், நாளடைவில் பணமாகவும் பவுனாகாவும் கூடச் செலுத்தப்படுகின்றன.

வழக்கம்போல் சுற்றிலும் பக்த கோடிகள் இல்லாத சமயமாகப் பார்த்துக் கண் விழித்த ‘சாமிகள்’ ஒரு நாள் தங்கள் சீட கோடிகளிடம் தங்களைத் தொட்டுக் காட்டிக் கேட்கின்றன:

‘இந்தக் காணிக்கைகள் எந்தச் சாமிக்கு அதிகம்? இந்தச் சாமிக்கா, அந்தச் சாமிக்கா?’

‘அந்தச் சாமிக்குத்தான்’, ‘அந்தச் சாமிக்குதான்!’ என்று இரண்டு சாமிகளின் சீடகோடிகளும் சொல்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/103&oldid=1371082" இருந்து மீள்விக்கப்பட்டது