பக்கம்:ஓ மனிதா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கீரி கேட்கிறது

103

‘ஏன்?’

‘நீங்கள் இருவருமே பொதுவாகத் ‘தாடிச் சாமியார்கள்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுவதால உங்களில் எந்தச் சாமி சக்தி மிக்க சாமி என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. அந்தக் குழப்பத்தில் இங்கே செலுத்த வேண்டிய காணிக்கையைக் கொண்டுபோய் அங்கே செலுத்திவிடுகிறார்கள்; அங்கே செலுத்த வேண்டிய காணிக்கையைக் கொண்டு வந்து இங்கே செலுத்தி விடுகிறார்கள்!’

‘இதைத் தடுக்க வழி?’

இருக்கிறது.

‘என்ன வழி?’

‘ஒருவர் மொட்டை சாமி’யாகவும், இன்னெருவர் ‘தாடிச்சாமி’யாகவும் மாற வேண்டும்.

‘நல்ல யோசனை! இப்போதே நீங்கள் அந்தச் சாமியிடம் போய் நிலைமையை விளக்கி, அவரை உடனே மொட்டைச் சாமியாகி விடச் சொல்லுங்கள்.’

இவ்விடத்துச் சீடகோடிகள் அவ்விடம் தூது செல்கின்றன; அவ்விடத்துச் சீடகோடிகள் இவ்விடம் தூது வருகின்றன.

நிலைமையை விளக்கியது தான் மிச்சம், எந்தச் சாமியும் மொட்டைச் சாமியாகச் சம்மதிக்கவில்லை. ‘அவன் சக்திக்கு என் சக்தி ஒன்றும் குறைந்ததல்ல’, ‘என் சக்திக்கு அவன் சக்தி ஒன்றும் மிஞ்சியதல்ல’ என்று இரண்டு சாமிகளுமே அடம் பிடிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/104&oldid=1371087" இலிருந்து மீள்விக்கப்பட்டது