பக்கம்:ஓ மனிதா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

ஒ, மனிதா!

அப்புறம்?...

‘இன்னொரு வழி இருக்கிறது’ என்று மெல்ல ஆரம்பிக்கின்றன சீடகோடிகள்.

‘அது என்ன வழி?’

‘உங்கள் விபூதியை விட உங்கள் முடியே சக்தி மிக்கதென்று ஒரு புரளியை மக்களிடையே ரகசியமாகக் கிளப்பிவிடவேண்டும். அந்த முடியைக் கேட்டால் நீங்களாகக் கொடுக்க மாட்டீர்களென்றும், நீங்கள் நிஷ்டையிலிருக்கும் சமயம் பார்த்து அவற்றில் ஒன்றைக் கத்தரித்து எடுத்துக் கொண்டு போய் வெள்ளித் தாயத்திலோ, தங்கத் தாயத்திலோ வைத்துக் கட்டிக்கொண்டால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்றும் சொல்லிவிட வேண்டும். அப்புறம் பாருங்கள், சவரத் தொழிலாளிக்குக்கூட வேலை வைக்காமல் பக்தர்களே அந்தச் சாமியை மொட்டைச் சாமியாக்கி விடுவார்கள்!’

‘பேஷ்! அதுவே சரி, அதுவே சரி!’

இந்த அபூர்வ யோசனை ஒரு தரப்பாருக்கு மட்டும் உதித்திருக்கக் கூடாதா? இரு தரப்பாருக்குமே ஏக காலத்தில் உதித்துவிடுகிறது. பலன்? இரண்டு சாமிகளுமே மொட்டைச் சாமிகளாகி விடுகின்றன!

நல்ல வேளையாகச் சிறையிலிருந்து தப்பி வந்திருந்த அந்தச் ‘சாமி’களைப் போலீசார் தக்க சமயத்தில் வந்து பிடித்துவிடவே விவகாரம் முற்றாமல் அத்துடன் நிற்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/105&oldid=1371096" இலிருந்து மீள்விக்கப்பட்டது