பக்கம்:ஓ மனிதா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

}105

ஒ. மனிதா!

ஆக, உண்மையாயிருந்தாலும் ஒருவனுடைய திறமையைப் பற்றி எழுதுவதை நம்ப நீங்கள் தயாராயில்லை; பொய்யாயிருந்தாலும் அவனை வைத்து எழுதப்படும் மகிமையை நம்பவே நீங்கள் தயாராயிருக்கிறீர்கள்!

மனிதா! நீண்ட நெடுங்காலமாகக் கீரியான என் விஷயத்திலும் நீ இந்தத் தவறான நம்பிக்கையையே கொண்டிருக்கிறாய்?

பாம்புக்கும் எனக்கும் என்ன பகை?

என் காதலியை அது களவாடப் பார்த்ததா? அதன் காதலியை நான் களவாடப் பார்த்தேனா?—ஒன்றுமில்லை; நத்தை, எலி போன்றவை எனக்கு உணவாவது போல அதுவும் உணவாகிறது. அதை உணவாக உட்கொள்ள நான் முயலும்போது அது தன்னைக் காத்துக் கொள்ள என்னுடன் போரிடுகிறது. நானும் அதனுடன் போரிடுகிறேன். அவ்வளவே!

ஆனால்...

அதன் நச்சுப் பையை மட்டும் நான் தின்பதில்லை.

ஏன்?

அதைத் தின்றால் நானும் இறப்பது உறுதி.

தின்றால் மட்டுமென்ன, நச்சுள்ள பாம்பால் கடிபட்டாலும் நான் மடிவது உறுதி, உறுதி, உறுதி!

அந்த நிலைமை எனக்கு ஏன் வரமாட்டேன் என்கிறது?

அதுதான் என் திறமை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/107&oldid=1371291" இலிருந்து மீள்விக்கப்பட்டது