பக்கம்:ஓ மனிதா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஓ,மனிதா

“இங்கிதம் தெரியாதவன்”, “பண்பாடில்லாதவன்”, “பிழைக்கத் தெரியாதவன்”, “அசடு”– இப்படி எத்தனையோ பட்டங்களை அவன் ஏற்க வேண்டியிருக்கிறது.

சுருங்கச் சொன்னால் நீங்கள் கடைப்பிடிக்கும் நாகரிகமே பொய்க்குப் புதுப் புதுப் பெயர் சூட்டி மகிழ்வதுபோல் தோன்றுகிறது!

இருந்தாலும் இந்த நாட்டில் உண்மை போன்ற உபதேசங்கள் இன்று நேற்றல்ல; எத்தனையோ நாட்களாக எத்தனையோ வருடங்களாக எத்தனையோ யுகங்களாக செய்யப்பட்டு வருகின்றன. மனிதனும் அவற்றைச் செவிமடுத்தே வந்திருக்கின்றான்.

பலன்?—அந்த உபதேசங்களை விதம் விதமான புத்தகங்களாக வெளியிட்டும் உபதேச கர்த்தாக்களின் திரு உருவங்களைச் சிலைகளாக வடித்தும், வண்ணப் படங்களாக அச்சிட்டும் விற்று, அவற்றால் கிடைத்த லாபத்தைக காதும் காதும் வைத்தாற் போல் தன் சட்டைப் பையில் போட்டுக் கொள்வதோடு சரி!

மாறுதல்? — புறத்தில்தான் காணப்படுகிறதே தவிர, அகத்தில் காணப்படவில்லை. இருந்தாலும் உபதேசம் செய்வது நின்றதா? இல்லை; தொடர்ந்தது.

“அறஞ் செய விரும்பு” என்றாள் அவ்வை; மனிதன் அதைத் தவிர மற்றவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கிறான்.

“அச்சம் தவிர்” என்றார் பாரதியார்; மனிதன் அதைத் தவிர மற்றவற்றையெல்லாம் தவிர்த்துக் கொண்டிருக்கிறான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/11&oldid=1367826" இலிருந்து மீள்விக்கப்பட்டது