பக்கம்:ஓ மனிதா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

ஓ, மனிதா!

களால் பேசப்படுகிறது—ஏன் இரு சாராருமாகச் சேர்ந்தே அதைப் பற்றி வீட்டில் விவாதிக்கிறீர்கள். வெளியே விவாதிக்கிறீர்கள். சட்டமன்றத்தில் கூட விவாதிக்கிறீர்கள். பகுத்தறிவுள்ள மனிதர்களல்லவா, பெண்களுக்கு எதிராகப் பேசக்கூடாதவற்றையெல்லாம் பேசிவிட்டு விவாதிக்கக் கூடாதவற்றை யெல்லாம் விவாதித்து விட்டுச் சகோதரி, அம்மையார், என்று சமாளிக்கிறீர்கள்.

அதற்கும் மேலே போய் ஒரு சிலர் கர்ப்பத்தடையைப் பற்றியும், கருச்சிதைவைப் பற்றியும் உயர்தரப் பள்ளிகளிலேயே மாணவ—மாணவிகளுக்குச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்கிறார்கள்; இன்னும் சிலரோ ‘அதுவரை காத்திருப்பானேன், ஆரம்பப் பள்ளியிலேயே ஆரம்பித்து விடுவதுதான் சரி’ என்கிகிறார்கள்.

த்தகைய பகுத்தறிவுள்ள மனிதர்களான உங்களுக்கு இப்போது ஒரு புது மோகம். பிறந்திருக்கிறது—அதுதான் புகழ் மோகம். அதற்காக நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள்!

‘சொந்த வாழ்வை’ப் ‘பொது வாழ்வு’ என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி ஏதாவது ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறீர்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சொற்பெருக்கு ஆற்றுகிறீர்கள். சொற்போர் நிகழ்த்துகிறீர்கள்.

‘தொண்டர்கள்’ என்ற பெயரால் ‘அப்பாவிகள்’ சிலரை உங்கள் சாகசப் பேச்சால் வசப்படுத்தி, ‘ஏதாவது ஒரு போராட்டம்' என்ற பேரால் அவர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/111&oldid=1371310" இலிருந்து மீள்விக்கப்பட்டது