பக்கம்:ஓ மனிதா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

ஓ, மனிதா!

யும் கேட்ட பிறகு நீங்கள் இப்படிப் பாராட்டும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்?' என்று சொல்லி, அதைத் ‘தன்னடக்கம்’ என்று வேறு நினைத்துக் கொண்டுவிடுகிறீர்கள், அல்லது பிறரை நினைக்க வைக்க முயலுகிறீர்கள்.

இதெல்லாம் அரசியல் உலகில் புகழுக்காக நீங்கள் செய்யும் தகிடு தத்தங்கள்; இலக்கிய உலகிலோ?...

உங்களில் ஒரு சாரார், ‘கம்பன் அப்படிச் சொல்கிறான். இளங்கோ இப்படி சொல்கிறான்’ என்று முழுக்க முழுக்க அவர்கள் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கிறார்கள், கட்டுரையின் தலைப்புக்குக் கீழே தங்கள் பெயரை மட்டும் அவர்கள் இருவருடைய பெயர்களைக் காட்டிலும் பெரிதாகப்போட்டுக் கொண்டு விடுகிறார்கள்.

கம்பன் சொல்வது சரி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘என்று கேட்டால், ‘அவர்கள் தான் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்களே, அதற்கு மேல் நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது?’ என்று சொல்லி விட்டோ அல்லது சொல்லாமலேயோ மெல்ல நழுவி விடுகிறார்கள்.

இன்னொரு சாரார், கதை, கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார்கள். அவை பிரசுரமானால் சரி, பிரசுரமாகா விட்டால் தாங்களாகவே சொந்தப் பணத்திலோ, அல்லது ஊரான் வீட்டுப் பணத்திலோ பத்திரிகை நடத்தத் தொடங்குகிறார்கள். அதில் தங்கள் மனம் போனபடி எழுதுகிறார்கள். படிக்க ஆள் கிடைத்தால் சரி, கிடைக்காவிட்டால் தாங்கள் இருக்கும் தெருவுக்கோ, ஊருக்கோ தனி ‘எழுத்தாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/113&oldid=1371327" இலிருந்து மீள்விக்கப்பட்டது