பக்கம்:ஓ மனிதா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குயில் கேட்கிறது

115

‘போஸ்டர்’ அடிக்க வைத்து, ஊர் முழுவதும் ஒட்ட வைக்கிறேனா?

என் புகழ் பரவ எந்த ‘இல்லைப் பாட்டுக்கார’னை யாவது தேடிப் பிடித்து, என்னைப்பற்றி அவனை ‘வில்லுப் பாட்டு’ப் பாட வைக்கிறேன?

பிடிப்பவர்களைப் பிடித்து என்னைப் பற்றிய செய்திகள், விமர்சனங்கள் சினிமாவிலும் ரேடியோவிலும் தொடர்ந்து வர ஏற்பாடு செய்கிறேனா?

பிச்சைக்காரனுக்கு ஒரு பைசா போடப் போவதாக சொல்வதாயிருந்தால்கூட, இதைப் போடுவதற்கு முன்னலேயே பத்திரிகைக்காரர்களை யெல்லாம் கூப்பிட்டு வைத்துப் பேட்டி அளிக்கிறேன?

இல்லை, இல்லவே இல்லை. அதற்கெல்லாம் மாறாக நான் என்ன செய்கிறேன்?

உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள மரத்தின்மேல் உட்கார்ந்து கூவும்போது உங்கள் குழந்தை என்னைப் போலவே கூவி என்னைப் பார்க்க முயன்றால்கூட உடனே நான் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறேன்—அதில் கூட அத்தனை வெட்கம் எனக்கு!—உங்களுக்கு அந்த வெட்கம் கூட இல்லையே? பாழும் புகழுக்காகப் பொய்யை வரவேற்று வளர்த்து, உண்மைக்கு விடை கொடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறீர்களே!

மனிதா புகழைத் தேடிச் சென்றல் அது ஓடிவிடும் என்பது உனக்குத் தெரியாதா? நீ வலிந்து அடைந்த புகழ் உன்னை நீண்ட நாள் மேட்டில் உட்கார வைக்காது. இன்றில்லாவிட்டாலும் என்றா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/116&oldid=1371345" இலிருந்து மீள்விக்கப்பட்டது