பக்கம்:ஓ மனிதா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

ஓ மனிதா

வது ஒரு நாள் அது உன்னைப் பள்ளத்தில் தள்ளிவிடும் என்பதை நீ அறியாயோ?

கொஞ்சம் யோசித்துப் பார்!—நீயாகத் தேடி அடையும் புகழ் போலிப் புகழ்; தானாக உன்னைத் தேடி வரும் புகழே உண்மையான புகழ். அதுவே உன் மறைவுக்குப் பிறகும் உன்னை வாழ வைக்கும் புகழ்.

அத்தகைய புகழை அடைந்திருக்கும் நான் அதற்காகச் செய்ததெல்லாம், செய்வதெல்லாம் என்ன? கூவுகிறேன்; அவ்வளவே.

பூவுக்கு அதன் வாசமே விளம்பரம்; எனக்கு என் கூவலே விளம்பரம்.

அதே மாதிரி உனக்கும் உன் செயலே விளம்பரமாயிருக்கட்டும்; புகழ் தானாக உன்னைத் தேடி வரும்.

அதைவிட்டு, அதற்காக உன்னை நீயே அளவுக்கு மீறி விளம்பரப்படுத்திக் கொள்வது மக்களிடையே புகழை வளர்க்காது; வெறுப்பைத்தான் வளர்க்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/117&oldid=1371346" இலிருந்து மீள்விக்கப்பட்டது