பக்கம்:ஓ மனிதா.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரிச்சான்குருவி கேட்கிறது

11


இந்த நிலையில் ‘வாயில்லாப் பூச்சி’யான நான், ‘வாயுள்ள பூச்சி’களான உங்களுக்கு எந்தவிதமான உபதேசங்களையும் செய்ய விரும்பவில்லை; செய்யவும் கூடாது; செய்வதிலும் பலனில்லை. ஆனால் ஒன்றை மட்டும் இங்கே நான் சொல்லிவிட வேண்டும். அதாவது, இந்தக் கட்டுரைத் தொடரில் நாங்கள் சொல்லப்போவது அத்தனையும் உண்மை. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இதையாவது நம்பவேண்டுமே என்பதற்காக.

சில சமயம் உங்களிடையே நாங்கள் காணும் சில காட்சிகள் எங்களுக்கு வேடிக்கையாகவும் இருக்கின்றன. வேதனையாகவும் இருக்கின்றன. அவற்றை உங்களிடம் சொல்லி அதனால் ஏற்படும் ரசானுபவங்களை உங்களுடன் சேர்ந்து அனுபவிக்கவேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.

தையைக் கேளுங்கள்: நான் இருக்கும் சோலையை ஒட்டி ஒரு தெரு. தெரு என்றால் ‘மேட்டுக் குடிமக்கள்’ வசிக்கும் தெரு, அந்தத் தெருவின் இரு மருங்கிலும் வரிசை வரிசையாக வீடுகள். ஒரு நாள் நடுப்பகல். “ஐயோ, திருடன்! திருடன்!” என்று கத்திக் கொண்டே ஒரு பெண் தன் வீட்டை விட்டு வெளியே ஒடி வந்தாள். அவளுக்கு முன்னால் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை போல் தோற்றமளித்த ஒருவன் கையில் சூட்கேசுடன் விறுவிறுவென்று கடந்து கொண்டிருந்தான். “ஐயோ, அவன் தான். திருடன்! அவனைக் கொஞ்சம் பிடியுங்களேன்! அவர் கூட வீட்டில் இல்லையே” என்று அக்கம் பக்கத்தாரைப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டே அவனைத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/12&oldid=1370204" இருந்து மீள்விக்கப்பட்டது