பக்கம்:ஓ மனிதா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானை கேட்கிறது

119

ப்படி அரசினர் உன்னை வைத்தே உன்னைப் பிடிப்பதிலிருந்துதான் என்னை வைத்து என்னைப் பிடிக்கும் வித்தையை நீ கற்றிருக்க வேண்டும். இல்லையா?

அது எப்படியாவது இருக்கட்டும்—அந்த நாளில் ராஜாக்கள் உன்மேல் பவனி வந்து, தங்கள் ‘தனித் தன்மை’யை நிலைகாட்ட வேண்டியிருந்தது. அதைப் பார்த்த புலவர் பலர் பாடிப் பிழைக்க வேண்டியிருந்தது. அதற்காகக் கற்பனையிலாவது பல பெண்களை விட்டு, அந்த ராஜாக்களை அவர்கள் காதலிக்க வைக்க வேண்டியிருந்தது. இந்தக் கஷ்டத்துக்காக என்னைப் பிடித்து அப்போது பழக்கித் தொலைத்தார்கள்!

அடுத்தாற்போல் போர்! ‘போர்’ என்றதும் ‘வைக்கோல் போராக்கும்’ என்று நினைத்துவிடப் போகிறீர்கள்;—யுத்தம்! அந்த யுத்தத்தில் எதிரிகளின் கோட்டைக் கதவுகளை உடைத்தெறிய அந்த நாளில் நம் மதிப்புக்குரிய மன்னர்களுக்கு வெள்ளைக்காரனும் துணைக்கு வரவில்லை; அவன் பீரங்கியும் துணைக்கு வரவில்லை. அதனால் என்னைப் பிடித்து பழக்கி அந்தக் கதவுகளுடன் மோதவிட்டு, அவற்றையும் உடைத்தார்கள்! என் தலையையும் உடைத்தார்கள்.

அதெல்லாம் போய்ப் பளுதுாக்கும் வேளை வந்தது. உங்களால் தூக்கமுடியாத பாரத்தைத் தூக்க என் துணை உங்களுக்கு வேண்டியிருந்தது. அதற்காக எங்களைப் பிடித்துப் பழக்கினிர்கள்.

ரொம்ப சரி.

இப்போதுதான் விதம் விதமான ‘கிரேன்’களெல்லாம் வந்துவிட்டனவே பளு தூக்க? இன்னுமா நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/120&oldid=1371357" இலிருந்து மீள்விக்கப்பட்டது