பக்கம்:ஓ மனிதா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

ஓ மனிதா

வென்றால், நீங்களும் கீழே உள்ளவரை சோஷலிஸம் பேசிவிட்டு, மேலே போனதும் அதை மறந்து விடுகிறீர்கள்; நாங்களும் கீழே எதையாவது வைத்துத் தின்ன நேர்ந்தால் சோஷலிஸ்ட்டுகளாக இருக்கிறோம்; மேலே வைத்துத் தின்ன முடிந்தால் ‘சுதந்திரா’வாகி விடுகிறோம்.

அடாடா! இந்த ‘அழுமூஞ்சி உலக’த்தையே ‘ஆனந்த உலக’மாக்கப் போகும் சோஷலிஸத்தில் நமக்குள்ளே என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை!

து போகட்டும்; இது என்ன சங்கதி?—உங்களில் சிலர் உண்பதற்காகக் காடை, கவுதாரி போன்றவற்றைப் பிடிக்கிறார்கள், அதை நான் பார்த்திருக்கிறேன். வளர்ப்பதற்காகக் கிளி, மைனா போன்றவற்றைப் பிடிக்கிறார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். எங்களையோ?—யாரும் எதற்காகவும் பிடிக்கவுமில்லை; பிடிப்பதாகத் தெரியவுமில்லை. அப்படியிருந்தும் இந்தக் ‘காக்கா பிடிக்கும் கலை’ என்று உருவாகி வளர்ந்தது?...

அதைப் பற்றி நீங்கள் யோசித்தீர்களோ இல்லையோ, நான் யோசித்தேன், யோசித்தேன், அப்படி யோசித்தேன். கடைசியில் அந்தக் கதைதான் என் நினைவுக்கு வந்தது. ‘எந்தக் கதை?’ என்கிறீர்களா?—சொல்கிறேன்:

தங்களைப் பற்றியே. இன்னும் சரி வர ஆராய்ந்து தெரிந்துகொள்ளாத உங்களில் சிலர், எங்களைப் பற்றி இப்போது ஆராய்ந்து வருகிறார்களல்லவா? அவர்கள் எங்கள் இனத்தைத் ‘திருட்டுப் பறவை இன’த்தில் சேர்த்திருக்கிறார்கள். ‘இது ஏன்?’ என்று எனக்குப் புரியவில்லை. யாரோ படைத்த பொருட்களுக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/125&oldid=1371380" இலிருந்து மீள்விக்கப்பட்டது