பக்கம்:ஓ மனிதா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

ஓ, மனிதா!

சலவைத் தொழிலை மேற்கொண்டு, ‘ஜாதிக்கு ஒரு தொழில் இல்லை’ என்பதை நிரூபிக்க ஒரு சர்மாவோ, சாஸ்திரியோ எங்கே துணியப் போகிறார்?

என்னை ‘ஆகாயத் தோட்டி’ என்று இழித்துரைக்கும் மனிதனே! உங்களிடையே உங்களில் ஒருவகை நடமாடும் தோட்டியை நீ ‘நகர சுத்தித் தொழிலாளி’, என்று சொல்லிவிட்டால் சமூகத்தில் அவனுக்குள்ள இழிவு அவனை விட்டுப் போய்விடுமா?

ஒரு நாளும் போகாது.

அதணால்தான் ‘வைசிய’ரான மகாத்மா, தாமே ‘தோட்டி வேலை’ செய்து காட்டினர். அவரையே டாக்டர் அம்பேத்கார் கேட்டார்:

”அரிஜனங்கள் ‘கடவுளின் மக்கள்’ என்றால் மற்றவர்கள் யாருடைய மக்கள்?”

இதிலிருந்து என்ன தெரிகிறது? ‘புறப்புரட்சி மூலம் யாரும் எதையும் சாதிக்க முடியாது; அகப்புரட்சி மூலமே சாதிக்க முடியும்’ என்று தெரியவில்லையா?

அந்த அகப் புரட்சியை நீ எப்போது செய்யப் போகிறாய்?

அதைச் செய்தால், ‘ஜாதி இருக்காது; ஜாதி இல்லாவிட்டால் தேர்தலில் சுலபமாக வெற்றிபெற முடியாது; தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டால் எம். எல். ஏ. வாகவோ, அமைச்சராகவோ ஆக முடியாது; ஆகாவிட்டால் ஜனநாயகம் பிழைக்காது’ என்கிறாயா?

அதுவும் சரி; எது பிழைத்தால் என்ன, எது பிழைக்காவிட்டால் என்ன?-நீ பிழைத்தால் சரி!

‘சுயநல’த்தில் பிறந்த சோஷலிஸம் இப்படி இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்?

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/129&oldid=1371403" இலிருந்து மீள்விக்கப்பட்டது