பக்கம்:ஓ மனிதா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஓ,மனிதா

தொடர்ந்து ஓடினாள் அவள். அதற்குள் அங்கே ஒரு சிறு கூட்டம் சேர்ந்தது. அந்தக் கூட்டத்தைக் கண்டதும் அவன் கையிலிருந்த பெட்டியைக் கீழே வைத்துவிட்டுச் சட்டென்று ஒரு கத்தியை எடுத்துக்காட்டி, ஜாக்கிரதை கிட்டவந்தால் குத்திவிடுவேன்!” என்றான். அவ்வளவுதான்; அடுத்த கணமே அவனை ‘அம்போ’ என்று விட்டுவிட்டுக் கூட்டம் கலந்து விட்டது. எல்லோரும் அவரவர்கள் வீட்டுக்குள் ஒடித் தெருக்கதவைப் படாரென்று அடித்துச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு விட்டார்கள்.

ஆகா! இந்த மேட்டுக் குடியினருக்குத்தான் என்ன வீரம்! என்ன வீரம்!

இப்படி ஓடி ஒளிந்தவர்களில் வீரத்துக்குப் பேர் போன சேர நாட்டார் உண்டு; சோழ நாட்டார் உண்டு; பாண்டிய நாட்டார் உண்டு, பல்லவ: நாட்டாரும் உண்டு.

எதிரியைச் சிங்கமென எதிர்த்து நின்ற அந்த மாவீரர்களின் வழித்தோன்றல்களா இந்தச்சுண் டெலிகள்!

“தெருக் கதவைத் தாளிட்டு விட்டோமா?” என்று: ஒரு முறைக்கு இருமுறையாகப் பார்த்துவிட்டு ஒரு சுண்டெலி சொல்கிறது; “என்ன ஜனநாயகம் வேண்டி கிடக்கின்றது? இந்த ஜனநாயகத்திலே! ஜனங்களுக்குப் பாதுகாப்பே இல்லை. வெள்ளைக்காரன் காலத்திலே இப்படியா இருந்தது? நாளைக்காகட்டும். ‘ஆசிரியருக்குக் கடித’த்திலே தீட்டுத் தீட்டென்று: தீட்டி விடுகிறேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/13&oldid=1370236" இலிருந்து மீள்விக்கப்பட்டது