பக்கம்:ஓ மனிதா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரிச்சான்குருவி கேட்கிறது

13

இன்னொரு சுண்டெலி சொல்கிறது: “போலீசுக்குப் போன் செய்யலாமென்று போனேன். அதற்குள் கத்தியைத் தூக்கிவிட்டானே!”

இவர் புகழ் பெற்ற அரசியல் வாதிகளில் ஒருவர். அடிக்கடி ‘ரத்தம் சிந்துவதைப் பற்றி’யே வீராவேசமாகப் பேசுவார். அன்றைக்கு முதல் நாள் கடந்த ஒரு கூட்டத்தில் இவர் பேசிக் கொண்டிருந்த போது ஒரு சிறுவன் இவருக்குப் பின்னுலிருந்த மாமரத்தின் மேல் மாங்காய்க்காகக் கல்லை விட்டெறிய, அந்தக்கல் தவறி இவருடைய நெற்றிப் பொட்டில் பட்டு ரத்தம் கசிய, பழியை எதிர்க் கட்சிக்காரன் தலையில் போட்டு, உடனே தன்னைப் போட்டோ எடுக்கச் சொல்லி, அதை அடுத்த தேர்தலுக்குரிய வண்ணப்போஸ்டர்களில் ஒன்றாக்கிக் கொண்டவர். அத்துடன் இல்லாமல ரத்தக் கறை படிந்த அந்தக் கல்லை இவர் ஏலத்துக்கு விட, அதை ஒரு புத்திசாலி நூறு ரூபாய்க்கு ஏலம் எடுக்க, அந்தத் தொகையைக் கட்சிக்காகக் கொடுத்தவர். இத்தகையவர்கூட ‘வண்ணப் போஸ்டருக்காக, கட்சி நிதிக்காக ரத்தம் சிந்தினாலும் சிந்துவேனே தவிர, ஒர் அபலைப் பெண்ணுக்காக ஒரு துளி ரத்தம் கூடச் சிந்தத் துணிய மாட்டேன், போன் செய்யத்தான் போவேன்!’ என்றால் வேடிக்கையாக இல்லையா இது? வேதனையாக இல்லையா இது?

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும் தன்காளை எடுத்து

என்ற குறளில், “தன் உடம்பில் விழுப்புண் படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வீரன் நினைப்பான்” என்கிறாரே வள்ளுவர், அந்தக் குறளே மேடைக்கு மேடை எடுத்துச் சொல்வதோடு, கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/14&oldid=1370240" இலிருந்து மீள்விக்கப்பட்டது