பக்கம்:ஓ மனிதா.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஓ மனிதா


கண்ட இடத்திலெல்லாம் எழுதி வைப்பதோடு உங்கள் வீரம் நின்று விடுகிறதே, ஏன் சுவாமி.

உங்கள் இனத்தில் இருப்பது போலவே எங்கள் இனத்திலும் திருடர்கள் உண்டு. அதிலும் இந்தக் காகம், இருக்கிறதே காகம், அது பொல்லாத திருடு, கொஞ்சம் ஏமாந்தால் போதும்; எங்கள் கூட்டில் புகுந்து முட்டை, குஞ்சு ஆகியவற்றையெல்லாம் திருடிக் கொண்டு போய்த் தின்று தீர்த்துவிடும்.

என்னைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?—என் பெயர் கரிச்சான் குருவி. காவல் பறவை இனத்தைச் சேர்ந்தவன். என்னை அண்டி எத்தனையோ பறவைகள் வாழ்வது உண்டு. அவற்றில் ஏதாவது ஒன்று காகத்தைக் கண்டு குரல் கொடுக்க வேண்டியதுதான் தாமதம், விரைந்து சென்று அதை நான் விரட்டு விரட்டு என்று விரட்டவில்லையா?

இத்தனைக்கும் உருவத்தில் காகம் என்னைவிடப் பெரிது. இருப்பினும் ஒரு துணிவு; சகப்பறவைகளை எப்படியும் காக்கவேண்டுமென்ற ஓர் உறுதி—இவை இரண்டுமே அத்தகைய சக்தியை எனக்குக் கொடுக்கின்றன. அதைக் கொண்டு மிகச் சிறிய உருவத்தைப் பெற்றிருக்கும் நின் மிகப் பெரிய பறவையான காகத்தை மட்டுமல்ல—வைரி, வல்லுாறு போன்ற, பறவைகளைக் கூட எதிர்த்து நிற்கிறேன். ஓ, மனிதா! எனக்குள்ள இந்தத் தைரியமும் தன்னம்பிக்கையும் உனக்கு ஏன் இல்லை?

“அவை இரண்டும் தவிர மற்றவை எல்லாம்தான் எங்களிடம் இருக்கிறதே!” என்கிறாயா?—ரொம்ப சரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/15&oldid=1370245" இருந்து மீள்விக்கப்பட்டது