பக்கம்:ஓ மனிதா.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஓ மனிதா

“போடா, கழுதை!” என்று மகனைச் செல்லமாகத் திட்டுவதற்கு மட்டுமா, “போடி, கழுதை!” என்று மனைவியை ஆசையோடு கொஞ்சுவதற்குக்கூட நான்தான் கிடைக்கிறேன் உங்களுக்கு.

உங்களுக்கு பிடிக்காத அரசியல்வாதிகள், சங்கீத வித்வான்கள் ஆகியோரையெல்லாம் நீங்கள் என்னை வைத்தே கலாட்டா செய்து வருகிறீர்கள்.

அம்மம்மா! என்னை வைத்து நீங்கள் கட்டியிருக்கும் கதைகள்தான் எத்தனை எத்தனனை!

அவற்றில் ஒரு கதை இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

லவையாளன் ஒருவன்—இன்றுதான் அவனை விட்டால் எங்களுக்கு வேறு கதி கிடையாது, எங்களை விட்டால் அவனுக்கும் வேறு கதி கிடையாது’ என்று ஆகிவிட்டதே! — அவன் வீட்டில் என்னைப் போன்ற கழுதை ஒன்று இருக்கிறது. அந்தக் கழுதையுடன் ஒரு நாயும் இருக்கிறது. ஒருநாள் இரவு திருடன் ஒருவன் அவன் வீட்டுக்குத் திருட வருகிறான். அப்போது நாய்க்கு நல்ல தூக்கம்; திருடன் வந்ததைக் கூடக் கவனிக்காமல் அது அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது—சதா மனிதனுடன் பழகிக் கொண்டிருக்கும் கழுதைதானே? அவனைப் போலவே அதுவும் யார் எப்படிப் போனால் நமக்கென்ன? என்று சும்மா இருந்திருக்கக் கூடாதா?—போதாத காலம், ‘அசட்டு நாய் இப்படித் தூங்குகிறதே! எஜமான் வீட்டுச் சொத்தெல்லாம் கொள்ளை போகிறதே! இதன் விசுவாசம் இவ்வளவுதானா?’ என்று நினைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/17&oldid=1370253" இருந்து மீள்விக்கப்பட்டது