பக்கம்:ஓ மனிதா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஓ, மனிதா!


அடுத்த நிமிடம் அவருடைய பார்வை அடுக்களைப் பக்கம் திரும்பும்; “என்னடி, காப்பி இன்னும் போட லையா? ‘ஏ ஒன்’னாப் போட்டுக் கொண்டுவா!” என்பார். ஆமாம், செத்துப் போன அந்தப் பத்து லட்சம் பேருக்காக அவர் அன்றைக்கு மட்டும் ‘ஏ டு’ காப்பி குடிக்கக் கூடத் தயாராயிருப்பதில்லை.

காப்பி வரும். “இன்று இட்லிக்கு என்ன சட்னி?” என்பார்; “தேங்காய்ச் சட்னி” என்று பதில் வரும்.

“ஒரு நாளைப் போலத் தேங்காய்ச் சட்னியா? இன்றைக்குக் கொத்தமல்லி கொத்சு பண்ணக் கூடாதோ?” என்பார் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு.

ஆமாம், செத்துப்போன அந்தப் பத்து லட்சம் பேருக்காக ‘ஆர்டினரி சட்னி’யான தேங்காய்ச் சட்னியையா அன்றைக்கும் தொட்டுக் கொள்வது? ‘ஸ்பெஷல் கொத்தமல்லி கொத்சு’ தொட்டுக் கொள்ள வேண்டாமோ?

இவற்றுடன் இன்னொன்றையும் இங்கே நான் சொல்லிவிட வேண்டும்— அவர் மாட்டுக்கு இரக்கம் காட்டுகிறார் என்றால், அதற்காக சர்க்கார் அவருக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள்; மனிதனுக்கு இரக்கம் காட்டினால் அவருக்கு யார் சம்பளம் கொடுக்கப் போகிறார்கள்?— உங்களுக்குத்தான் எதையும் சம்பளத்தோடு கிம்பளமும் வாங்கிச் செய்தே பழக்கமாகிவிட்டதே!

“ஓ, மனிதா! இந்த லட்சணத்தில் வாழும் உங்களை எத்தனையோ மகான்கள் இதுவரை எத்தனையோ வகையில் மனிதனாக்க முயன்றிருக்கிறார்கள். கடைசியாக அந்த வகையில் முயன்று பார்த்தவர் மகாத்மா—தம்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/21&oldid=1370268" இலிருந்து மீள்விக்கப்பட்டது